தமிழ் திரை உலகில் முதல் முதலாக நீச்சல் உடையில் நடித்த நடிகை என்றால் அது கேஆர் விஜயா என்ற நிலையில் கன்னட திரையுலகில் முதன் முதலாக நீச்சல் உடையில் நடித்த நடிகை ஜெயந்தி என்பதும், இவர் நடிகர் பிரசாந்தின் சின்ன பாட்டி என்பதும் பலரும் அறியாத தகவலாகும்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஜெயந்தி பெற்றோருடன் வாழ்ந்து வந்த நிலையில் திடீரென அவரது பெற்றோர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். இதனை அடுத்து ஜெயந்தியின் தாயார் தனது குழந்தைகளுடன் சென்னைக்கு வந்தார்.
ஒரு கை ஓசை: படம் முழுவதும் ஒரு வசனம் கூட பேசாமல் கே.பாக்யராஜ் நடித்த படம்..!

குடும்பத்தை 15 வயதிலேயே காக்க வேண்டிய நிலையில் இருந்த ஜெயந்தி சினிமாவில் நடிக்க முடிவு செய்தார். இதனை அடுத்து அவர் தனது தாயாருடன் ஒவ்வொரு ஸ்டுடியோவாக சென்று வாய்ப்பு கேட்டார்.
அவரது முயற்சியின் காரணமாக சின்ன சின்ன கேரக்டர் கிடைத்தாலும் பெரிய அளவில் வருமானம் இல்லை. இந்த நிலையில் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது தான் அந்த படத்தின் இயக்குனர் ஜெயந்தியை பார்த்து இந்த படத்தில் ஒரு வேடம் இருக்கிறது நடிக்கிறீர்களா என்று கேட்க உடனே அவர் ஒப்புக்கொண்டு நடித்தார். அந்த படம் அவருக்கு பெரிய அளவில் வரவேற்பை கொடுத்த நிலையில் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்தார்.
இதையடுத்து அவருக்கு கன்னட திரை உலகில் வாய்ப்பு வந்தது. தமிழில் குலதெய்வம் என்ற சூப்பர் ஹிட் படத்தின் கன்னட ரீமேக்கில் அவர் முக்கிய வேடத்தில் நடித்தார். அதனை எடுத்து அவருக்கு கன்னடத்தில் பல திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது.

கன்னட திரைப்படத்தில் முதல் முதலாக கிளாமர் உடைகளை அணிந்து நடித்தது ஜெயந்திதான். குறிப்பாக நீச்சல் உடையில் நடித்த முதல் கன்னட நடிகை என்ற பெருமையும் இவருக்கு கிடைத்தது.
அது மட்டும் இன்றி ஒரு கன்னட திரைப்படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து அவர் விருதை பெற்றார்.
இந்த நிலையில்தான் அவருக்கு தமிழ் திரைப்படங்களிலும் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், நாகேஷ் உள்பட பலரின் படங்களில் நடித்தார். எம்ஜிஆர், சிவாஜி நடித்த பல படங்களில் அவர் நடித்திருந்தாலும் ஒரு முறை கூட இருவருக்கும் ஜோடியாக நடிக்கவில்லை.
ஆனால் அதே நேரத்தில் ஜெமினி மற்றும் நாகேஷுக்கு பல படங்களில் ஜோடியாக நடித்தார். படகோட்டி திரைப்படத்தில் வில்லன் நம்பியாருக்கு ஜோடியாகவும் அவர் நடித்துள்ளார்.
ரஜினியின் ‘ஜானி’: இரட்டை வேடம் என்றாலே ஆள்மாறாட்ட கதை தான்.. ஆனால் இந்த படம் வித்தியாசமானது..!

இந்த நிலையில்தான் கே.பாலச்சந்தர் கண்ணில் பட்டதை அடுத்து அவர் பாலச்சந்தரின் ஆஸ்த்தான நாயகியாக மாறினார். பாலச்சந்தர் இயக்கத்தில் உருவான நீர்க்குமிழி, பாமா விஜயம், புன்னகை, இருகோடுகள் உள்பட பல திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனர் சிவராமன் என்பவரை நடிகை ஜெயந்தி திருமணம் செய்து கொண்டார். சிவராமனுக்கும் ஜெயந்திக்கும் உள்ள வயது வித்தியாசம் 25 என்பதுதான் ஆச்சரியமான ஒன்று. அது மட்டுமின்றி சிவராமனுக்கு ஏற்கனவே திருமணம் நடந்து நான்கு குழந்தைகள் இருந்தனர். சிவராமனின் முதல் மனைவிதான் நடிகர் பிரசாந்த்தின் பாட்டி என்பதால், ஜெயந்தி பிரசாந்துக்கு சின்னப்பாட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெயந்தியின் திருமணம் சர்ச்சைக்குரியதாக மாறினாலும் ஒரு கட்டத்தில் சிவராமன் தனது மனைவியை சமாதானப்படுத்தி ஜெயந்தியை தன்னுடைய வீட்டுடன் சேர்த்துக் கொண்டார். இதனை அடுத்து ஜெயந்திக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தையுடன் அவர் ஜெயந்தியின் முதல் மனைவியுடன் ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்.
திருமணத்திற்கு பின்னரும் ஜெயந்தி தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய திரைப்படங்களில் நடித்தார். அவருக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்தது.
ஒரு கட்டத்தில் அவருக்கு அம்மா, அக்கா, அண்ணி வேடங்கள் கிடைத்தது. எந்த வேடம் கிடைத்தாலும் அதில் அவர் நடித்திருந்தார். இந்த நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விவாகரத்து செய்து மகனுடன் தனியாக வாழ்ந்ததாகவும் கூறப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தனது 76 வயதில் நடிகை ஜெயந்தி காலமானார். காந்த குரலுக்கு சொந்தக்காரர். முதல் முதலாக கன்னட திரையில் நீச்சல் உடையில் நடித்தவர். எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்பட மூன்று தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர் என்ற பல புகழ்களை ஜெயந்தி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
