பாசமழை பொழிந்த அக்கா தேவயானி.. கண்களில் நீர் ததும்ப கேட்ட நகுல்.. வாஸ்கோடகாமா பட ஆடியோ வெளியீட்டு விழாவில் நடந்த உணர்ச்சி சம்பவம்

Published:

தென்னிந்திய சினிமாவில் 90களில் அனைவருக்கும் பிடித்த ஒரு நடிகையாகத் திகழ்ந்தவர் தேவயானி. இந்திய சினிமாவின் அனைத்து முன்னணி நட்சத்திரங்களுடன் ஜோடியாக நடித்தவர். மேலும் 80-களில் ரேவதி எப்படி திகழ்ந்தாரோ அதேபோல் 90-களின் பிறந்தவர்களின் மனம் கவர்ந்த நாயகியாக தேவயானி திகழ்ந்தார்.

தேவயானி இருந்தாலே படம்ஹிட் என்று சொல்லும் அளவிற்கு ராசியான நடிகையாகவும் திகழ்ந்தார். இவரின் தம்பி நடிகர் நகுல். இயக்குநர் ஷங்கரின் பாய்ஸ் படம் மூலமாக ஐந்தில் ஒரு கதாநாயனாக நடித்தார். நகுல் நடிப்பு மட்டுமின்றி சிறந்த பாடகராகவும் விளங்குகிறார்.

நடிகர் நகுலுக்கும், தேவயானிக்கும் இடையே பல வயது வித்தியாசம். மேலும் தேவயானி காதல் திருமணம் செய்து கொண்ட போது அக்கா மீது இருந்த கோபத்தால் பல வருடங்களாக அவரிடம் பேசாமல் இருந்தார். தற்போது மீண்டும் இவர்களது சகோதர சகோதரி உறவு பூத்துள்ளது. பாய்ஸ் படத்திற்குப் பின் காதலில் விழுந்தேன், மாசிலாமணி போன்ற படங்களில் நடித்து ஹிட்டானார் நகுல்.

தமிழ்சினிமாவில் அடுத்த ரவுண்டு வரப் போகிறார் என்று எண்ணிய வேளையில் தொடர்ந்து பல புதிய நடிகர்கள் அறிமுகமாயினர். மேலும் இவர் நடித்த படங்களும் சுமாரான வெற்றியையே பெற்றன.

இதனால் சரியான கதைக்களம் இன்றி திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தவர் தற்போது சில வருடங்கள் இடைவெளிக்குப் பின் வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான இப்படம் காமெடிப் படமாக உருவாகியுள்ளது. நகுலுடன் கே.எஸ்.ரவிக்குமார், மன்சூர் அலிகான், ரெடின்கிங்ஸ்லி, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை அருண்.

இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் ஹீரோ நகுலடன் அவரின் அக்காவான தேவயானி கலந்து கொண்டு தனது தம்பி நகுலை வாழ்த்திப் பேசினார்.

இனி தமிழ்ல பெயர் பலகை இல்லையா? அதிரடி காட்டப் போகும் தமிழ் வளர்ச்சித்துறை.. வணிக நிறுவனங்களே உஷார்..!

அப்போது அவர்பேசுகையில், நகுல் எனக்கு இரண்டாவது சகோதரன், மிக சின்னப் பையன், அவனுக்கு நான் அக்கா கிடையாது. அம்மா மாதிரி. எல்லாருக்கும் ஒரு நேரம் வரும்ன்னு சொல்வாங்க.. அந்த நேரத்துக்காக அவன் காத்துகிட்டு இருக்கான். சினிமா துறையில் அக்கா-தம்பி இருவருமே தனித்தனி ஹீரோ, ஹீரோயினான உறவு எங்குமே கிடையாது. இன்னும் நிறைய படங்கள் உனக்கு வரவேண்டும். நல்ல வாய்ப்புகள் உனக்குக் கிடைக்கும்” என வாழ்த்திப் பேசினார்.

தேவயானி பேசப் பேச நகுல் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் ததும்பியது. பேசி முடித்ததும் தனது தம்பியை வாரி அணைத்துக் கொண்டார் தேவயானி. ஒரு அக்காவாக தாய் ஸ்தானத்தில் இருந்து அவரை வழிநடத்தி, வாழ்த்தியது படவிழாவிற்கு வந்திருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும் உங்களுக்காக...