ராஜகுமாரன் இயக்கத்தில் பார்த்திபன், அஜீத், தேவயாணி நடித்த படம் நீ வருவாய் என. 1999ல் வெளியானது. இப்போது படம் வெளியாகி 25 ஆண்டுகள் ஆனதையொட்டி படக்குழுவினர் இந்த விழாவைக் கொண்டாடி வருகின்றனர். இதனால் படத்தில் நடித்த நடிகர்கள் வலைதளங்களில் பேட்டி கொடுத்து வருகின்றனர்.
நீ வருவாய் என படத்தில் இயக்குனர் ராஜகுமாரனைக் கரம் பிடித்தவர் படத்தில் நடித்த தேவயாணி. இந்தக் காதல் எப்படி மலர்ந்தது? யார் முதலில் காதலைச் சொன்னது என பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கேட்க, அதற்கு நடிகை தேவயாணி இப்படி பதில் சொல்கிறார்.
நீ வருவாய் என படத்தோட கதை, வசனம், திரைக்கதை எல்லாமே ரொம்ப பிடிச்சிருந்தது. இவ்ளோ அழகா கதை, வசனம் எழுதியிருக்குறவருன்னா அவருக்குள்ள எவ்வளவு அழகான காதல் இருந்து இருக்கும்?
அப்படி இருந்ததால தான் அவரால இப்படி ஒரு படைப்பை படைக்க முடிஞ்சது. ஒரு டைரக்டரோட ரிப்ளக்ஷன் தான் அவரோட படைப்பு. அந்த வகையில ராஜகுமாரன் ஒரு நல்ல மனிதர். அன்பானவர்.
ஆர்டிஸ்ட்ங்க கிட்ட ஒன்மோர் கேட்கும்போது கூட அவ்ளோ அழகா ஸ்வீட்டா கேட்பாரு. அந்த மாதிரியான குணம் எல்லாருக்கும் வராது. டைரக்டர் டென்ஷன் ஆகாம ஸ்வீட்டா பேசி ஒன்மோர் கேட்குறது பெரிய விஷயம். ஆனா அந்த காலகட்டத்துல தான் காதலும் நடந்தது.
அது ரொம்ப வேகமா நடந்து கல்யாணத்துல முடிஞ்சது. முதல்ல அவர் தான் காதலை சொன்னாரு. முடியாதுன்னு சொல்லிட்டேன். அது நடக்காத காரியம்;னு சொன்னேன். ஏன் முடியாதுன்னு கேட்டாரு. எப்பவுமே பாசிடிவ்வா நினைக்கிறவரு தான் அவரு.
அப்புறம் நானும் ஏன் முடியாது பார்க்கலாம்னு நினைச்சேன். அப்படி தான் காதல் வந்தது. கல்யாணத்துக்கு அப்புறம் ஹேப்பியா இருக்கோம் என்று புன்னகை பூக்கிறார் தேவயாணி.
படத்தைப் பற்றிப் பேசும்போது நடிகர் பார்த்திபன் இந்தப் படத்துக்குக் காசை வாங்கிட்டு தேவயாணி நடிக்காம ஏமாத்திட்டாங்கன்னு ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அப்புறம் தான் தெரிந்தது. நடிகை தேவயாணி படத்தின் கதாபாத்திரமாகவே மாறி விட்டார் என்று. அவர் மட்டும் அப்படி நடிக்காவிட்டால் இந்தப் படம் இன்று வரை பேசும்படமாக இருந்து இருக்காது என்றும் தெரிவித்தார்.
அது மட்டுமல்லாமல் இந்தப் படத்தில் அஜீத் நடித்த கேரக்டர் தான் எனக்கு ரொம்பப் பிடிச்சது. அதே நேரம் அந்தக் கேரக்டர் மீது தான் எனக்கு அதிகம் கோபம் இருந்தது.
எனது காதலை ஹீரோயின் ஏத்துக்காம இருந்ததுக்குக் காரணமே அந்தக் கேரக்டர் தான் என்றும் தெரிவித்து இருந்தார். இந்தப் படத்தைப் பற்றிய இன்னொரு தகவலையும் முன்பே ராஜகுமார் பகிர்ந்து இருந்தார்.
இந்தப் படத்தில் முதலில் அஜீத் கேரக்டரில் நடிக்க விஜய் ஆசைப்பட்டாராம். அது ஏற்கனவே அஜீத்துக்குப் புக்காகி விட்டது என்றதும் தான் அவரால் படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.