பத்மினிக்கு முன்பே இவங்க தான் நாட்டிய பேரொளி.. அந்த காலத்திலேயே நடிகைக்கு இருந்த பெரிய லட்சியம்..

By Bala Siva

Published:

நாட்டிய பேரொளி என்றால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகை பத்மினி தான். ஆனால் பத்மினிக்கு முன்பே நாட்டிய பேரொளி என்று அழைக்கப்பட்டவர் தான் பிரபல நடிகை பத்மினி பிரியதர்ஷினி. இவர் கேரளாவில் பிறந்தவர். இருப்பினும் அவர் சிறு வயதில் சென்னைக்கு வந்து வழுவூர் ராமையா பிள்ளை அவர்களிடம் முறைப்படி நாட்டியம் கற்றுக் கொண்டார்.

ராமச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட பத்மினி பிரியதர்ஷினிக்கு மூன்று மகன்கள் மற்றும் ஒரு மகள் இருந்தாலும் அவர் திருமணத்திற்கு பின்னரும் நாட்டியத்தில் கூடுதல் கவனம் செலுத்தினார். இதற்கு மத்தியில் அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைத்தது.

1959 ஆம் ஆண்டு பீம்சிங் இயக்கத்தில் உருவான ’சகோதரி’ என்ற திரைப்படத்தில் நடித்தார் பத்மினி பிரியதர்ஷினி. தொடர்ந்து பாத காணிக்கை  உட்பட சில படங்களில் நடித்த பத்மினி பிரியதர்ஷினி, தமிழில் மட்டுமின்றி ஹிந்தி, கன்னடம், தெலுங்கு போன்ற படங்களிலும் நடித்தார்.

padmini priyadharshni1

அன்னையின் ஆணை, பாக்தாத் திருடன், பக்த மார்கண்டேயா, தெய்வபலம், இரு சகோதரிகள், இருவர் உள்ளம், குறவஞ்சி போன்ற படங்களில் நடித்தார். இதனை அடுத்து அவர் மாலையிட்ட மங்கை, நெஞ்சம் மறப்பதில்லை, பாத காணிக்கை, பெற்ற மனம், ரத்தினபுரி இளவரசி,  தாமரைக்குளம், தேன்நிலவு, விடிவெள்ளி, பாகப்பிரிவினை உள்பட பல படங்களில் நடித்தார்.

ஒரு கட்டத்தில் அவர்  நடிப்பதை நிறுத்திவிட்டு டான்ஸ் பள்ளி நடத்த முடிவு செய்தார். கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்கா சென்ற அவர் அங்கு டான்ஸ் பள்ளி அமைத்து குழந்தைகளுக்கு டான்ஸ் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து கர்நாடக மாநிலத்தில் செட்டில் ஆனார் பத்மினி. கர்நாடக மாநில அரசு அவருக்கு கல்வித்துறையில் முக்கிய பதவி கொடுத்து கௌரவித்தது.

தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழிகளிலும் பல இந்திய மொழிகளிலும் நடித்த அவரது கனவு தன்னிடம் நாட்டியம் பயிலும் குழந்தைகள் மிகச்சிறந்த டான்ஸர்களாக வரவேண்டும் என்பதுதான். அவரிடம் டான்ஸ் கற்றவர்கள் பின்னாளில் பெரிய அளவில் வளர்ந்வளர்ந்து பெயர் எடுத்தார்கள்.

இந்த நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு நடிகை பத்மினி பிரியதர்ஷினி 2012ஆம் ஆண்டு வெளியான ’லைஃப் ஆஃப் பை’ என்ற ஆங்கில பாடத்தில் நடித்தார். அதன் பிறகு அவர் நடிக்கவில்லை. 2016 ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி தனது 71 வது வயதில் பெங்களூரில் தங்களுடைய இல்லத்தில் அவர் காலமானார். நடிகை பத்மினி பிரியதர்ஷினி மறைவுக்கு கர்நாடக அரசு இரங்கல் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.