தமிழ் சினிமாவில் தனது நடிப்பினால் மட்டுமல்லாமல் தனது குணத்தினாலும் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனால் இவருக்கு இப்படத்தில் வில்லனாக நடிக்கவே வாய்ப்பு கிடைத்தது.
திறமைக்கும் நிறத்துக்கும் சம்பந்தம் கிடையாது என்பதை நிரூபித்தவர் நடிகர் விஜயகாந்த். ஆரம்பத்தில் பல இயக்குனர்களால் நிராகரிக்கபட்ட விஜயகாந்த் தனது விடாமுயற்சியினால் பல திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார்.
சிவாஜியை பார்த்து படத்தில் நடிக்க மறுத்த பாலிவுட் சூப்பர் ஸ்டார்!
இவர் நடித்த கேப்டன் பிரபாகரன், பூந்தோட்ட காவல்காரன் போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார். அரசியல் சார்ந்த சிந்தனைகளை தனது படங்களின் மூலம் கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த்.
விஜய், சூர்யா போன்ற பல நடிகர்களின் திரைவாழ்க்கைக்கு பல வகைகளில் உதவியவர் நடிகர் விஜயகாந்த். ஆனால் நன்றாய் சென்ற இவர் வாழ்க்கையில் இவருக்கு வில்லனாக அமைந்ததும் இவரது குடிபழக்கமே. இதனால் தனது உடலளவில் மிகுந்த சிரமத்தையும் சந்தித்தார் விஜயகாந்த். சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களுக்கு மிகவும் பிடித்தவரும் கூட.
மெளன ராகம் படத்தில் மிஸ்டர் சந்திரமெளலி ஞாபகம் இருக்கிறதா? நடிகர் ரா சங்கரனின் திரையுலக பயணம்!
இவர் நடித்த திரைப்படங்களில் ஒன்று ஊமை விழிகள். இப்படத்தில் விஜய்காந்துடன் இணைந்து அருண்பாண்டியன், வாகை சந்திரசேகர் போன்ற நட்சத்திரங்களும் நடித்திருந்தனர். இப்படத்தினை தயாரிப்பாளர் ஆபாவணன் தயாரித்திருந்தார். இப்படத்தின் கதையை தயாரிப்பாளர் முதலில் வாகை சந்திரசேகரிடம் கூறியுள்ளார். அப்படத்தில் டிஎஸ்பி தீனதயாளன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சில நடிகர்களின் பெயரை கூறியுள்ளார்.
அப்போது அக்கதையை கேட்ட வாகை சந்திரசேகர் அக்கதாபாத்திரத்திற்கு விஜயகாந்த் பொருத்தமாய் இருப்பார் என கூறியுள்ளார். உடனே அக்கதாபாத்திரத்தில் விஜய்காந்தை நடிக்க வைத்துள்ளார். இப்படம் விஜயகாந்துக்கு வெற்றியையும் தேடி தந்தது.