என்னது… சூர்யா தனி விமானம் வாங்கிட்டாரா…? அடேங்கப்பா… விலை இத்தனை கோடியா…?

Published:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. இவரின் இயற்பெயர் சரவணன் என்பதாகும். இவர் மூத்த நடிகர் சிவகுமார் அவர்களின் மகன் மற்றும் அவரது சகோதரர் கார்த்திக் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ஆவார். தனது 22 வது வயதில் 1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானார் சூர்யா.

பின்னர் 2001 ஆம் ஆண்டு நந்தா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திருப்புமுனையை பெற்றார். பின்னர் காக்க காக்க, மௌனம் பேசியதே, பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், சிங்கம் ஒன்று இரண்டு மூன்று ஆகிய தொடர் படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார் சூர்யா.

ஒவ்வொரு படத்தில் நடிக்கும் போதும் சூர்யா ஒரு வித்தியாசமான கதைக்களத்தோடும் வித்தியாசமான கெட்டப் போடும் தனது ரசிகர்களை சஸ்பெண்ஸ் ஆக வைத்து கொண்டே இருப்பார். அந்த வரிசையில் தற்போது சூர்யா நடிப்பில் கங்குவா உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. தனது நடிப்பிற்காக ஆறு பிலிம்பேர் விருதுகள், 5 தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார் நடிகர் சூர்யா.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான ஜோதிகாவை திருமணம் செய்து கொண்ட சூர்யா நடிகராக மட்டுமல்லாமல் தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து 2டி என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி தென்னிந்தியாவின் பல மொழி திரைப்படங்களை தயாரித்து வருகின்றனர். இது தவிர அகரம் பவுண்டேஷன் என்ற டிரஸ்ட் ஒன்றை உருவாக்கிய சூர்யா வறுமையினால் படிக்க முடியாத ஏழை குழந்தைகளையும் படிக்க வைத்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது தென்னிந்தியாவில் தனியாக பிரைவேட் ஜெட்டுகள் வைத்திருப்பவர்கள் வரிசையில் சூர்யாவும் இடம் பெற்று இருக்கிறார். சிரஞ்சீவி, ராம்சரண், அல்லு அர்ஜுன், மகேஷ்பாபு, நயன்தாரா ஆகியோர் வரிசையில் நடிகர் சூர்யாவும் சொகுசான தனியார் விமானத்தை வாங்கியுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் சூர்யா டசால்ட் பால்கன் 2000 என்ற தனியார் விமானத்தை வாங்கியுள்ளார். இந்த விமானத்தில் ஆடம்பர வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் போன்றவை இருக்கிறது. இந்த தனியார் விமானத்தின் விலை சுமார் ரூபாய் 120 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது.

மேலும் உங்களுக்காக...