அடடே போட வைத்த கருடன் சூரி.. பளிச்சினு கொடுத்த கொட்டுக்காளி அப்டேட்

By John A

Published:

தமிழ் சினிமாவில் தற்போது சூரி காட்டிலும், யோகி பாபு காட்டிலும் தான் அடைமழை என்று கூற வேண்டும். ஒருபக்கம் யோகி பாபு சிம்புதேவன் இயக்கத்தில் BOAT படத்தில் ஹீரோவாக நடிக்க, மறுபுறம் சூரி கொட்டுக்காளி படத்தில் நடித்துள்ளார். புரோட்டா சூரி என்ற பெயர் மறைந்து இன்று கருடன் சூரி என்று வரும் அளவிற்கு சினிமாவில் நடிப்பில் நன்கு தேர்ச்சி பெற்று அடுத்தடுத்த பரிணாமங்களில் சென்று கொண்டிருக்கிறார் சூரி.

வெண்ணிலா கபடிக் குழு படத்தில் முக்கிய நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் சுசீந்திரன். அதற்கு முன் பல படங்களில் நடித்திருந்தாலும் இந்தப் படம் அவருக்குப் பெரிய திருப்புமுனையைக் கொடுத்தது. இதற்கு அடுத்தாக காமெடியில் ஒரு பெரிய ரவுண்டு வந்தாலும் வெற்றி மாறன் பட்டறையில் கூர்தீட்டப்பட்டு விடுதலையில் ஜொலித்தார் சூரி.

இதற்கு அடுத்து இனி நடிச்சா ஹீரோதான் பாஸ் என்று அடுத்ததாக கருடன் படத்தில் சொக்கனாக பொங்கி எழுந்தார். இதாண்டா நடிகனுக்கு அழகு என்று சொல்லும் வகையில் அடுத்தடுத்து முக்கிய ரோல்களில் நடிக்கும் சூரி தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

அது நான் இல்லை.. இயக்குநர் விஜய் மில்டனுக்கு நச் பதில் கொடுத்த விஜய் ஆண்டனி

படத்தில் இவருக்கு ஜோடியா அன்னாபென் நடித்துள்ளார். வருகிற ஆகஸ்ட் 23-ல் திரைக்கு வரும் கொட்டுக்காளி படம் பற்றி நடிகர் சூரி இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய முந்தைய படங்களான விடுதலை, கருடனிலிருந்து முற்றிலும் வேறுபட்ட திரைப்படமாக கொட்டுக்காளி இருக்கும். இது ஒரு Mainstream Content Oriented திரைப்படம். உண்மைக்கு மிக நெருக்கமான படம். இதில் வரும் என்னுடைய பாண்டி என்கிற கதாபாத்திரம் எல்லா குடும்பங்களிலும் இருக்கும் ஒருவன் தான். இந்தச் சமூகம் சொல்லிக் கொடுத்த உறவுமுறைகளையும், நம்பிக்கைகளையும் பெரிதும் நம்புகிற ஒரு கதாபாத்திரம்தான் பாண்டி.

இந்தப் படத்தில் வரும் பயணத்தில், இந்தச் சமூகம் உருவாக்குன பாண்டிக்கும், பாண்டி என்கிற தனிப்பட்ட ஒருவனுக்கும் நடக்குற மன போராட்டத்த சரியா பிரதிபலிக்கனும்னு ரொம்ப கவனமாக இருந்தேன். அதைச் சரியாகவும் பண்ணி இருக்கேன்னு நம்புறேன். நீங்க அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படமாக கொட்டுக்காளி நிச்சயம் இருக்கும்.” என்று கூறியிருக்கிறார் சூரி.