இந்திய சினிமாவின் நடிப்பு பல்கலைக்கழகம் என அனைவராலும் போற்றப்படுபவர் தான் சிவாஜி கணேசன். மேலும் நடிகர் திலகம், செவாலியர் என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அந்த கதாபாத்திரமாகவே மாறிவிடும் சிறப்புடையவர் சிவாஜி கணேசன். மன்னர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ள பலருக்கும் ஆர்வம் இருப்பது உண்டு. ஆனால் யாரும் நேரில் பார்த்ததில்லை. மன்னர்களை சினிமாதான் அவர்களை அடையாளப்படுத்தி இருக்கிறது. அப்படி பல மன்னர்களாக நடித்தாலும் சிவாஜி தான் மன்னர்களுக்கு சிறந்த அடையாளமாக இருக்கிறார்.
வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் என எந்த மன்னரை நினைத்தாலும் நமக்கு சிவாஜியின் முகம் தான் நினைவுக்கு வரும். அவரைப்போல ஒரு நடிகர் இனி எங்குமே கிடைக்க மாட்டார். ஆனால் சிலர் நடிகர் சிவாஜி ஓவர் ஆக்டிங் செய்வார் என்ற விமர்சனங்களை முன் வைத்ததும் உண்டு. அதற்கு இயக்குனர் மகேந்திரன் தன் மனதில் பட்ட பதில் ஒன்றை கூறியுள்ளார். அதில் சிவாஜியை ஓவர் ஆக்டிங் என்று சொல்கிறார்கள், நான் அப்படி சொல்ல மாட்டேன். சிவாஜி கணேசனின் நடிப்புக்கு ஏற்ற கதையை இதுவரை யாருமே எழுதியதில்லை. சிவாஜியின் தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதையும் வசனத்தையும் எழுதியவர் பாலு மகேந்திரன் அவர்கள் தான்.
அந்தப் படத்தில் இறந்து கிடக்கும் தனது மனைவியை சிவாஜி கணேசன் பார்க்கச் செல்லும் போதும், பார்த்த பின்பு பேசும் வசனத்திலும் சிவாஜியின் ஓவர் ஆக்சன் வெளியே தெரிந்திருக்காது. எதார்த்தமான நடிப்பு கொண்ட சிவாஜியே தெரிவார். சாதாரண சீனை தனது நடிப்பால் மெருகேற்ற நினைத்து செய்த நடிப்பை தான் இங்கு பலர் ஓவர் ஆக்டிங் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு உதாரணமாக சிவாஜி கேரக்டர் ஆர்டிஸ்ட் ஆக மாறிய பின்பு அவரது நடிப்பை பார்த்தால் புரியும்.
உதாரணமாக படையப்பா, தேவர் மகன், ஒன்ஸ்மோர், பூப்பறிக்க வருகிறோம் என அவர் குணச்சித்திர நடிகராக தோன்றிய படங்களில் ஒரு சீனில் கூட மிகை நடிப்பு இருக்காது. அதுதான் ஒரிஜினல் சிவாஜி கணேசன். இதற்கு சான்றாக தேவர்மகன் படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் ஒரு சீனில் சிறப்பாக நடித்திருப்பார் இது குறித்து முழு தகவலை பார்க்கலாம்.
தேவர் மகன் படத்தில் முக்கியமான காட்சிகளில் ஒன்று பஞ்சாயத்து சீன். அந்த சீனுக்காக ஸ்டார்ட் கேமரா ஆக்சன் சொன்னதும் சிவாஜி ஸ்கிரிப்ட் இருந்தபடி நடித்துக் கொண்டிருந்திருக்கிறார். பஞ்சாயத்தில் சலசலப்பு எழும்போது கோபமாக சிவாஜிகணேசன் வந்து காரில் ஏற வேண்டும். அதுதான் கமல்ஹாசனும் பரதனும் யோசித்து வைத்திருந்த சீன். ஆனால் சிவாஜியோ அந்த கோபத்தோடு வந்து காரின் கதவை ஓங்கி சாத்திவிட்டு கார் ஒன்று தான் குறைச்சல் என சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்து விடுவார். கதவை சாத்திவிட்டு சிவாஜி சென்றதும் என்ன செய்வது என்று தெரியாத கமல் கொஞ்ச தூரம் நடந்து போன பிறகு இது ஸ்கிரிப்ட் இல்லை நீங்கள் காரில் ஏறுவது தான் இருக்கிறது என்று கூறியிருக்கிறார்.
மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 68 இல் களமிறங்கும் மூன்று விஜய்!
அதற்கு சிவாஜி கமலஹாசனை பார்த்து சபையில் ஒரு பெரிய மனுஷனுக்கு அவமானம் நடக்கும் பொழுது அவன் காரில் செல்ல விரும்ப மாட்டான் கார் ஒன்று தான் தனக்கு குறைச்சலா என்று அந்த இடத்தில் இருந்து விரைவாக நகர்ந்து விடுவார். அதனால் தான் அப்படி செய்தேன் என்று கூறினார். அதை புரிந்து கொண்ட கமல் உடனே இந்த காட்சியை படத்தில் பதிவாக வேண்டும் என முடிவெடுத்தார்.
அதேபோல் சிவாஜி இறங்கும்போது வடிவேலுவும், சங்கிலி முருகனும் ரொம்பவே அழுது கொண்டிருப்பது போல நடித்தார்கள் உடனே சிவாஜி அவர்கள் நிறுத்துங்கடா கமல் தான் எனக்கு புள்ள நீங்க சத்தம் வராத மாதிரி நடிக்கணும் என சொல்லி இருக்கிறார். இப்படி சிவாஜி கணேசன் தனது நடிப்பில் மட்டும் இன்றி பிறரின் நடிப்பிலும் எதார்த்தத்தை தேடியவர்.