மெர்சல் திரைப்படத்தை தொடர்ந்து தளபதி 68 இல் களமிறங்கும் மூன்று விஜய்!

தளபதி விஜய் வாரிசு திரைப்படத்தின் சூப்பர் டூப்பர் ஹிட்டை தொடர்ந்து தற்பொழுது தளபதி 68 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பிரமாண்ட தொடக்க பூஜை சென்னையில் நடைபெற்றது. அதில் இந்த படத்தில் நடிக்கும் பிரபல நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதை தொடர்ந்து சென்னையில் ஒரு பாடல் காட்சி மற்றும் சில ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடத்தப்பட்டது. அதில் தளபதி விஜய் மற்றும் மைக் மோகன் கலந்து கொண்டதாகவும் பிரமாண்ட ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து தளபதி 68 இன் படத்தின் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்ட நிலையில் மீண்டும் படக்குழு வெளிநாடு சென்றுள்ளது. முதலில் இந்த படத்தில் உள்ள அனைத்து ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகவும் அதை தொடர்ந்து செண்டிமெண்ட், பாடல் காட்சிகள் படமாக்கப்பட குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகும் தளபதி 68 படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், நடன புயல் பிரபுதேவா, நடிகை சினேகா, நடிகை லைலா, நடிகர் யோகி பாபு, மலையாள நடிகர் ஜெயராம், நடிகை மீனாட்சி சவுத்ரி என பலர் இணைந்து நடிக்க உள்ளனர்.

இன்னும் தலைப்பிடப்படாத தளபதி 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் புத்தாண்டை முன்னிட்டு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் டீசர் அல்லது பாடல் காட்சிகள் பொங்கலை முன்னிட்டு வெளிவர இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இந்த படத்தின் டைட்டிலை தளபதி விஜய் தேர்வு செய்துள்ளதாகவும் அதற்கான டிசைனிங் வேலை தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இந்நிலையில் தளபதி 68 படத்தின் மாஸ் அப்டேட் ஒன்று வெளியாகி ரசிகர்களிடையே இந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் தளபதி 68 படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. அப்பா மகன் கதாபாத்திரத்தில் தளபதி விஜய் நடிக்க இருப்பதாகவும் இதில் மகன் கதாபாத்திரத்தில் இளமையாக தோன்ற வேண்டும் என்பதற்காக ஏ ஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இளமையான விஜயை இந்த படத்தில் பார்க்க இருப்பதாகவும் சில தகவல் வெளியாக இருந்தது. இந்த நிலையில் தளபதி 68 படத்தில் மூன்று விஜய் இருப்பதாக சில செய்திகள் வெளிவர துவங்கியுள்ளது.

தளபதி 68 படத்தில் 50 வயதுடைய கதாபாத்திரத்தில் தளபதி விஜய் அப்பாவாகவும், 25 வயது உடைய கதாபாத்திரத்தில் விஜய் மகன் ஆகவும் நடிக்க இருக்கிறார். அதைத் தொடர்ந்து இந்த படத்தில் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜயின், இளம் வயது கதாபாத்திரம் ஒன்று இருப்பதாகவும், வெறும் 15 நிமிடங்களை இந்த காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெற இருப்பதாகவும் புதிய தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது. அதாவது அப்பா கதாபாத்திரத்தின் பிளாஷ்பேக் விஜயாக 15 நிமிடம் 20 வயது தக்க விஜய் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அடுத்தடுத்த தோல்வி… ஹீரோயினாக இல்லாமல் அக்கா கேரக்டரில் களமிறங்கும் நயன்தாரா!

அந்த 20 வயது இளம் விஜய்க்காகவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிக இளமையான விஜயை கதையில் கொண்டுவர இயக்குனர் முயற்சித்து வருகிறார். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மிகவும் இளமையான விஜயை கதைக்குப் பொருந்தும் வகையில் நேர்த்தியான முறையில் அமைக்க வேண்டும் என்று இயக்குனர் வெங்கட் பிரபு தீவிர முயற்சியில் இறங்கியுள்ளார். இந்நிலையில் தளபதி 68 படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்தாலும் படத்துடன் இணைந்து பயணிக்கும் பொழுது மூன்று வேடங்களில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான மெர்சல் திரைப்படத்தின் தளபதி விஜய் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதில் தளபதி அப்பாவாகவும் மாறன், வெற்றி என இரண்டு கதாபாத்திரத்தில் விஜய் மகனாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் தளபதி விஜய்க்கு மிகப்பெரிய ஹீட் கொடுத்ததை தொடர்ந்து தளபதி 68 திரைப்படமும் விஜய்க்கு வெற்றியை கொடுக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. டைம் ட்ராவலை மையமாக வைத்து உருவாகும் தளபதி 68 படத்தின் கதை ரசிகர்களிடையே நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.