தமிழ் சினிமாவில் ரஜினி, கமல், விஜய், அஜித் என பல நடிகர்கள் வந்தாலும், அந்த காலத்தில் சிவாஜி நடிப்பிற்கு ஈடாகுமா என பலர் கூறி நாம் கேட்டிருப்போம். அந்த அளவிற்கு நடிகர் திலகம் சிவாஜியின் நடிப்பு பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு அமைந்திருக்கும். நடிகர் திலகம் என்ற பெருமைக்குரிய அடைமொழியுடன் தன்னுடைய வித்தியாசமான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி இன்றைய காலத்து பல நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கக்கூடிய நடிகர் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
எந்தவித கதாப்பாத்திரமாக இருந்தாலும் சரி அதில் தன்னுடைய தனித்தன்மையான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரமாகவே மாறி நடிக்க கூடிய திறமை கொண்டவர் சிவாஜி. இவரின் நடிப்புத் திறமையை பார்த்து இன்றைய தலைமுறை நடிகர்கள் பலரும் வியந்து பாராட்டி வருகின்றனர். அழுத்தமான வசனம், அதிரடி சண்டைக்காட்சி, அன்பை வெளிக்காட்டும் காதல் காட்சி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன் வசப்படுத்தி எழுந்து நின்று கைதட்டும் அளவிற்கு சிவாஜியின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கும்.
இன்றைய காலத்து பல நடிகர்களுக்கு முன்னோடியாக நடிகர் திலகம் இருப்பது போல அன்றைய காலத்தில் நடிகர் திலகம் சிவாஜிக்கு முன்னோடியாக இருந்த நடிகர் யார் என்ற ரகசிய தகவல் தற்போது கிடைத்துள்ளது.
அந்த வகையில் நடிகர் சத்யராஜ்க்கு சிவாஜியின் நடிப்பின் மீது அதிக மரியாதையும், மதிப்பும் இருந்துள்ளது. அதே நேரத்தில் சிவாஜியின் இந்த சிறந்த நடிப்பிற்கு காரணம் என்ன என்ற கேள்வியும் ஒரு பக்கம் இருந்துள்ளது. நடிகர் திலகம் சிவாஜிக்கு முன்னோடியாக இருந்த நடிகர் யார் என்ற ரகசியம் தெரிந்து கொள்ள சத்யராஜிற்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் இந்த கேள்வியை சிவாஜி இடம் கேட்பதற்கான வாய்ப்பு நடிகர் சத்யராஜுக்கு கிடைத்துள்ளது. அந்த நேரத்தில் நடிகர் சத்யராஜ் சிவாஜி இடம் உங்கள் நடிப்பு திறமைக்கு இன்ஸ்பிரேஷன் ஆக இருக்கும் அந்த நடிகர் யார் என்ன கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு நடிகர் திலகம் என்னடா நான் யாரைப் பார்த்து காப்பியடிக்கிறேன் என தெரிந்து கொள்ள அவ்வளவு ஆசையா என கேட்டுள்ளார். அதற்கு சத்யராஜ் இல்லை அப்பா உங்கள் நடிப்பு திறமையை உலகமே வியந்து பாராட்டுகிறது. ஆனால் உங்களுக்கு இந்த நடிப்பின் மீது இவ்வளவு ஆர்வமும், பிடிக்கும் ஏற்பட காரணமாக இருக்கும் அந்த இன்ஸ்பிரேஷன் நடிகரை பற்றி தெரிந்து கொள்வது எனக்கு ஒரு தனிப்பட்ட ஆர்வம் என அதற்கான விளக்கத்தை கொடுத்துள்ளார்.
அதை புரிந்து கொண்ட சிவாஜி நான் எந்த பாலிவுட் நடிகரையும் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆனதில்லை. எனக்கு மிகவும் பிடித்த நடிகர் எம் ஆர் ராதா தான். இரட்டைக் குறளில் வில்லத்தனமாக நடித்திருக்கும் எம் ஆர் ராதாவை தான் இந்த திரையுலகம் பார்த்திருக்கும். ஆனால் திரைப்படங்களில் நடிப்பதற்கு முன் நாடகங்களில் நடித்த எம் ஆர் ராதாவை அதிகமாக யாரும் கவனித்திருக்க மாட்டீர்கள். எம் ஆர் ராதாவின் நடிப்பிற்கு முன் எந்த ஆங்கில நடிகர்களும் பக்கத்தில் கூட நிற்க முடியாது. அந்த அளவிற்கு சரளமான ஆங்கில பேச்சு துடிப்பான நடிப்பை வெளிக்காட்டுவார் எம் ஆர் ராதா என சிவாஜி கூறினார்.
அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தெலுங்கு தயாரிப்பாளர்!
இந்த பதிலை சத்யராஜ் அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாறாக நடிகர் சிவாஜி எம் ஆர் ராதாவின் நாடக கம்பெனியில் முதலில் பணியாற்றிய பின்னர் அதை தொடர்ந்து தான் சினிமாவில் நடிக்க தொடங்கினார். அதை மனதில் வைத்து சிவாஜி அப்படி கூறியிருக்கலாம் என சத்தியராஜ் மனதில் நினைத்துக் கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிறிது நாள் கழித்து மலையாள நடிகர் மோகன்லால் இடம் இதுபோன்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என மோகன்லாலிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் எம் ஆர் ராதா என பதில் அளித்துள்ளார். இதை தெரிந்து கொண்ட சத்யராஜ் அதன்பின் எம் ஆர் ராதாவின் நடிப்புத் திறமையை தான் மனதார ஏற்றுக்கொண்டு புகழ்ந்து பாராட்டி ஒரு பேட்டி ஒன்றில் இந்த தகவலை கூறியுள்ளார்.