அஜித்தின் அடுத்த படத்தை தயாரிக்கும் பிரம்மாண்ட தெலுங்கு தயாரிப்பாளர்!

நடிகர் அஜித் நடிப்பில் ஹெட்ச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் துணிவு திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் கிட் அடைந்தது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து விறுவிறுப்பான ஆக்ஷன் திரில்லர் படமாக துணிவு திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் அஜித்திற்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியார் நடித்திருப்பார். சமுத்திரக்கனி, பவானி ரெட்டி, சான் கொக்கின், மமதி சாரி, அசய், வீரா பகவதி பெருமாள் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பின் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு அஜித் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படத்தின் அப்டேட் வெளியானது. சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான கழகத் தலைவன் திரைப்படம் மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. தற்பொழுது லைக்கா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் உருவாக உள்ளது. அக்டோபர் மாதம் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐரோப்பிய நாடான அஜர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

தீபாவளி அன்று கூட விடுமுறை இல்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அசுர வேகத்தில் நடைபெற்று வந்த நிலையில் முதல் ஷெடுல் முடிந்து சிறிது இடைவேளை விடப்பட்டுள்ளது. தற்போது சென்னை திரும்பிய விடாமுயற்சி படக்குழு இரண்டு மூன்று தினங்களில் மீண்டும் படப்பிடிப்பை நடத்த உள்ளதாகவும் அடுத்த ஷெடியூல் துபாயில் சில காட்சிகள் படமாக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.இந்த படப்பிடிப்பில் நடிகை திரிஷா, நடிகை பிரியா பவானி சங்கர், நடிகர் ஆரவ் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது.

பல தடைகளை தாண்டி நடைபெற்று வரும் விடாமுயற்சி திரைப்படம் இதே வேகத்தில் படமாகும் பட்சத்தில் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையை ஒட்டி இந்த திரைப்படம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாக தயாரிப்பு நிறுவனம் கூறியுள்ளது. அதாவது ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அல்லது அஜித்தின் பிறந்தநாள் ஆன மே ஒன்றாம் தேதி இந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் பரவலாக பேசப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான அஜித் 63 திரைப்படத்தை யார் இயக்க உள்ளார் என்பது ரசிகர்களின் விருப்பமான கேள்வியாக தற்பொழுது இருந்து வருகிறது.

தலைவர் 170வது திரைப்படத்தில் ரஜினி மற்றும் அமிதாப்பச்சனின் ரோல்.. கதை குறித்து வெளியான மாஸ் அப்டேட்

அந்த வகையில் அஜித்தின் 63வது திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்க உள்ளார் என தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. நடிகர் விஷால் எஸ் ஜே சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கியது ஆதிக் ரவிச்சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடிகர் அஜித் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இணைந்து நடித்துள்ளனர்.

இந்நிலையில் அஜித்தின் 63வது திரைப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க இருப்பதாக சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது. இது குறித்த உறுதியான தகவல் வெளியாகும் வரை சில நாட்கள் காத்திருக்கவும்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.