தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணம் வகுத்த நடிகர் என்றால் அது நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் தான். அந்த அளவிற்கு சிறந்த படைப்புகளை கொடுத்து கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசப்படுத்தி இருந்தார். அதனால் தான் நடிகர் திலகம் சிவாஜியை வைத்து படம் இயக்க அதிக தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் அடுத்தடுத்து வரிசையில் நின்றனர். ஆனால் நடிகர் சிவாஜி இந்த ஒரு பாடகர் தன் படத்தில் பாட வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். அந்தப் பாடகர் யார் எந்த பாடல் மூலமாக நடிகர் சிவாஜி அவர்களை கவர்ந்தார் என்பது குறித்த முழு தகவலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
நடிகர் சிவாஜி மற்றும் அவரின் மகனான நடிகர் பிரபு இருவரும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்த நேரம் அது. அப்பொழுது ரேடியோவில் அடிமைப்பெண் படத்தில் இருந்து ஒரு பாடல் ஒளிபரப்பப்பட்டது. ஆயிரம் நிலவே வா என தொடங்கும் அந்த பாடல் சிவாஜியை மெய்மறக்கச் செய்தது. அந்தப் பாடலை ஒரு முறை கேட்ட சிவாஜி பிரபுவை அழைத்து அந்த பாடலை மீண்டும் ஒலிக்கும் படி கேட்டுள்ளார். உடனே பிரபு அவர்களும் ஆயிரம் நிலவே வா பாடலை மீண்டும் ரேடியோவில் போட்டு உள்ளார். அதை மீண்டும் முதல் முறை கேட்பது போல சிவாஜி மிகுந்த ரசனை உடன் கேட்டு வந்துள்ளார். அப்படி இரண்டாம் முறை பாடல் முடிய மூன்றாவது முறையும் அழைத்து பாடலை முதலில் இருந்து ஒளிபரப்ப செய்யும்படி கேட்டுள்ளார்.
இப்படி தொடர்ந்து ஒரு நாள் மட்டும் அந்தப் பாடலை 50 முறைக்கு மேல் சிவாஜி கேட்டு வந்துள்ளார். அதன் பின் பிரபுவை அழைத்து இந்த பாடலை பாடியது யார் என்று கேட்டுள்ளார். ஆயிரம் நிலவே வா எனும் பாடலை எஸ் பி பாலசுப்ரமணியம் பாடியுள்ளார் என பிரபு கூறியதும் சிவாஜி தன் படத்தில் இந்த பாடகரை பாட வைக்க வேண்டும் என மனதில் முடிவு செய்துள்ளார். அதன் பின் எம் எஸ் விஸ்வநாதன் இடம் எனது படத்தில் எஸ்.பி பாலசுப்ரமணியன் ஒரு பாடல் பாட வேண்டும் என தனது விருப்பமான கோரிக்கையை வைத்துள்ளார் அதை ஏற்றுக் கொண்ட எம் எஸ் வி சிவாஜியின் சுமதி என் சுந்தரி திரைப்படத்தில் பொட்டு வைத்த முகமோ பாடலை எஸ் பி பாலசுப்ரமணியன் பாடியது குறிப்பிடத்தக்கது.
விஜய்யை நேரில் பார்க்க கேரவன் முன் காத்திருந்த அஜித்! அதன்பின் நடந்த அதிரடி!
மேலும் இந்த பாடல் குறித்த ஒரு சுவாரசியமான தகவல் என்னவென்றால், நடிகர் திலகம் சிவாஜியின் குரல் ஒரு சிங்க கர்ஜனை போல கனத்த குரல் ஆனால் எஸ்.பி பாலசுப்ரமணியன் அவர்களின் குரல் மிகவும் மென்மையான ஒரு இளைஞனின் குரல். இந்த குறளில் படத்தின் பாடல் அமைந்திருப்பதால் அந்தப் பாடலின் குரலுக்கும் சிவாஜியின் நடிப்பிற்கும் பொருந்தாமல் போய்விடுமோ என குழப்பம் இயக்குனருக்கும் அந்தப் பாடலுக்கு நடனம் சொல்லிக் கொடுத்த நடன ஆசிரியருக்கும் இடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த குழப்பத்தை தீர்த்து வைக்கும் வகையில் படத்தில் இந்த பாடல் காட்சியின் போது சிவாஜி கதாநாயகி அருகில் இருந்து பாடலை பாடுவது போல அமையாமல் சற்று தொலைவில் இருந்து பாடுவது போல காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும்.
இப்படி குறளின் வேறுபாடு வெளியில் தெரியாமல் இருக்க படப்பிடிப்பில் பல மாற்றங்களை செய்து இயக்குனர் அந்த பாடலை படமாக்கி இருப்பார். நடிகர் திலகம் சிவாஜியை வைத்து படம் இயக்க இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்ட நேரத்தில் தன் படத்தில் இந்த பாடகர் பாட வேண்டும் என்ற சிவாஜியின் ஆசையும் நிறைவேறியது அந்த பாக்கியம் எஸ்பிபிக்கு கிடைத்தது. இந்த தகவலை எஸ் பி பாலசுப்ரமணியன் அவர்கள் ஒரு பேட்டியின்போது மிகப் பெருமையாக கூறியுள்ளார்.