விஜய்யை நேரில் பார்க்க கேரவன் முன் காத்திருந்த அஜித்! அதன்பின் நடந்த அதிரடி!

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை படைத்தது. இந்த வெற்றியை சமீபத்தில் படக்குழு வெற்றி விழாவாக கொண்டாடி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தொடர்ந்து விஜய் தளபதி 68 படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்.

கடந்த மாதம் பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கிய இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் தற்பொழுது சென்னையில் சில காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்புகள் பல வெளிநாடுகளில் அடுத்தடுத்து நடத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் தளபதி விஜய் இரட்டை கதாபாத்திரத்தில் அதாவது அப்பா மகன் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தின் கதை டைம் ட்ராவல் மையமாக வைத்து உருவாகி இருப்பதாகவும், இந்த திரைப்படத்தின் கதை அம்சம் விஜய்யின் திரை வாழ்க்கைக்கு மிகப்பெரிய வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்றும் சினிமா வட்டாரங்களில் தகவல்கள் கிசுகிசுக்கப்படுகிறது.

மல்டி ஸ்டார் படமாக உருவாகும் தளபதி 68 படத்தில் டாப் ஸ்டார் பிரசாந்த், நடிகை லைலா, நடிகை சினேகா, முன்னணி நடிகர் மைக் மோகன் என பலர் நடிக்க உள்ளனர். மேலும் இந்த படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்த அப்டேட் டிசம்பர் 31ஆம் தேதி அல்லது புத்தாண்டு அன்று வெளியாகும் என்று சமீபத்திய தகவல் வெளியாகியிருந்தது.

மேலும் தளபதி 68 திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என இயக்குனர் வெங்கட் பிரபு கடினமாக உழைத்து வருகிறார். சிம்புவின் மாநாடு படத்தின் வெற்றியை தொடர்ந்து மன்மத லீலை, கஸ்டடி படங்களை இயக்கிய வெங்கட் பிரபுவிற்கு தளபதி 68 படத்தை இயக்குவது விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தை இயக்கும்போது ஏற்பட்ட சுவாரஸ்யமான தகவல் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

இயக்குனர் வெங்கட் பிரபு தளபதியின் 68வது திரைப்படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானதிலிருந்து அந்த படத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக பல சுவாரசியமான தகவல் வெளியாகியிருந்தது. அதற்கு காரணம் தளபதி விஜய், அஜித் மற்றும் வெங்கட் பிரபு இணைந்திருந்த புகைப்படம் தான். தற்பொழுது இந்த புகைப்படம் குறித்த சுவாரசியமான தகவல் கிடைத்துள்ளது.

மனைவி சங்கீதா சொன்ன ஒரு வார்த்தைக்காக அந்த இயக்குனர் படத்தில் நடித்த தளபதி!

அஜித்தின் ஐம்பதாவது திரைப்படமான மங்காத்தா திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கம் நேரத்தில் அதே படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யின் வேலாயுதம் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெற்று வந்துள்ளது. அப்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு நடிகர் அஜித்திடம் நாம் இருவரும் தளபதி விஜய் அவர்களை சந்தித்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ளலாமா என தனது வேண்டுகோளை வைத்துள்ளார். அதற்கு உடனே ஓகே சொன்ன நடிகர் அஜித் தளபதி விஜய் இருக்கும் இடத்திற்கு நேராக சென்றுள்ளார். அஜித்தின் வருகையை பார்த்த வேலாயுதம் படக்குழுவினர் அதிர்ச்சியில் உறைய தளபதி விஜய் கேரவனில் இருப்பதாக கூறியுள்ளனர்.

விஜய் வெளிவரும் வரை நடிகர் அஜித் கேரவனிற்கு வெளியே காத்து நிற்க, அஜித் நிற்கும் செய்தியை கேட்டவுடன் விஜய் வேகமாக வெளியே வந்து.. என்ன அண்ணா சொன்னால் நானே வந்திருப்பேனே எனக் கூறி சகஜமாக பேசி உள்ளார். அதன் பின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது ஆசையை கூற அப்போது தான் இந்த மூவரும் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த புகைப்படம் தற்பொழுது வைராலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.