எம்ஜிஆரின் கத்தி சண்டை வியந்து பார்த்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன்! உண்மையை உடைத்த பிரபலம்!

By Velmurugan

Published:

தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவான்களாக சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருந்தவர்கள் தான் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மற்றும் மக்கள் திலகம் எம்ஜிஆர். இருவருமே மேடை நாடகங்களில் நடித்து அதன் மூலம் கிடைத்த புகழின் மூலமாக வெள்ளி திரையில் நுழைந்தவர்கள். நடிப்பிற்கு இலக்கணமாக இருந்தவர்தான் நடிகர் திலகம் சிவாஜி. அதே போல் வீரத்திற்கு உதாரணமாக விளங்கியவர் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர். இருவருமே அவர் பாணியில் மிகச்சிறப்பான படங்களை நடித்து வந்தனர்.

நடிகர் திலகம் சிவாஜி பெரும்பாலும் சரித்திர திரைப்படங்களிலும், குடும்பக் கதை பாங்கான திரைப்படங்களிலும் நடித்து வந்திருந்தார். அதே நேரத்தில் மக்கள் திலகம் எம்ஜிஆர் ஆக்சன் படங்களில் சிறப்பாக நடித்துக் கொண்டிருந்தார். இதனாலே நடிகர் எம்ஜிஆருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கூட்டம் இருந்து வந்துள்ளது. குறிப்பாக நடிகர் எம் ஜி ஆர் வாள் ஏந்தி சண்டை போட்டும் காட்சிகளை பார்க்கும் ரசிகர்களும் திரையரங்கத்தை ஆரவாரத்துடன் ஒரு போர்க்களமாக மாற்றி விடுவார்களாம். அந்த அளவிற்கு வால் சண்டையில் வல்லவராக விளங்கியவர் தான் மக்கள் திலகம் எம்ஜிஆர். தொழில் ரீதியாக இருவருக்கிடையே போட்டி இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் அண்ணன் தம்பியாகவே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர். இதற்கு உதாரணமாக சித்ரா லட்சுமணன் ஓர் சம்பவத்தை கூறியுள்ளார்.

ஒரு பத்திரிக்கையில் சிவாஜி அவர்கள் எம் ஜி ஆர் ஐ பற்றி கூறும் பொழுது எம்ஜிஆர் எவ்வளவு பெரிய நடிகர் எனத் தெரியுமா அவரின் திறமை இந்த உலகத்திற்கும் அப்பாற்பட்டது. யாராலும் அவர் அவரிடம் இருந்து அதை பறிக்க முடியாது. திரையில் அவர் வாள் சுற்றும் விதம் யாருக்குத் தெரியும். அவர் வாளை கையில் எடுத்து விட்டாலே பார்ப்பதற்கு ஒரு பிரமிப்பாக தான் இருக்கும். எம்ஜிஆருக்கு இணையாக வாள் ஏந்தி சண்டை போடும் கலைஞர் யாரும் இல்லை என புகழ்ந்து பாராட்டி இருப்பார். அதைப்போல் நடிகர் திலகத்தின் நடிப்பை பற்றியும் எம்ஜிஆர் பல மேடைகளில் உருகி பேசியுள்ளார்.

ரஜினியின் வீட்டில் தரையில் அமர்ந்து அடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த்!

தொழில் ரீதியாக பல போட்டிகள் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் மக்கள் திலகம் மற்றும் நடிகர் திலகத்தைப் போல இதுவரை எந்த நடிகரையும் பார்த்ததில்லை என நடிகர் சித்ரா லட்சுமணன் நிகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் இந்த இரு நடிகர்களும் தாய் பாசத்தில் மிஞ்சிய ஆளே இல்லை என சொல்லும் அளவிற்கு வாழ்ந்து வந்துள்ளனர். எம்ஜிஆரின் தாயார் மீது சிவாஜி கணேசன் அவர்கள் மிகுந்த பாசம் வைத்திருந்தாராம். அது போல் சிவாஜியின் தாயார் மீது எம்ஜிஆர் அவரும் மிகுந்த பாசத்தோடும் மரியாதையோடும் பழகி வந்தாராம். எம்ஜிஆரின் தாயார் நடிகர் திலகம் சிவாஜி வரும் வரை எம்.ஜி.ஆருக்கு உணவு பரிமாறாமல் காத்திருக்க வைப்பாராம். அதன் பின் இருவரையும் ஒன்றாக அமர வைத்து உணவு பரிமாறுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த அளவிற்கு சிவாஜி கணேசனின் மீது எம்.ஜி.ஆரின் தாயார் மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார். இதைத்தான் ஒரு முறை எம்ஜிஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பும் பொழுது ஒரே தட்டில் உண்டு வளர்ந்தவர்களை இந்த அரசியல் பிரித்து விட்டது என கண்ணீர் மல்க கூறியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களை பார்த்தாலே எம் ஜி ஆரின் முகத்தில் ஒரு பொலிவு வந்துவிடும்.அதற்கு காரணம் நடிகர் திலகம் மீது எம்ஜிஆர் வைத்திருந்த மிகுந்த பாசம் தான். அதேபோல எம்ஜிஆரின் கத்தி சண்டை போடும் திரைப்படம் எதுவாக இருந்தாலும் சிவாஜி கணேசன் முதல் ஆளாக பார்த்து விடுவாராம். அந்த அளவிற்கு எம்ஜிஆர் இன் வாள் சண்டை மீது அதிக ஆர்வம், வியப்பூம் வைத்துள்ளார் சிவாஜி கணேசன்.