ரஜினியின் வீட்டில் தரையில் அமர்ந்து அடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த்!

1980 மற்றும் 90களில் முன்னணி நடிகராகவும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த மாஸ் ஹீரோவாகவும் வலம் வந்த நடிகர் தான் கேப்டன் விஜயகாந்த். ரஜினி மற்றும் கமலஹாசனுக்கு போட்டி நடிகராக தமிழ் சினிமாவில் ஜொலித்த நடிகர் விஜயகாந்த் அவர்களிடம் சிறந்த நட்புறவிலும் இருந்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் தலைவராக இருந்த நடிகர் சங்கத்திற்கு 1999இல் தலைவராக பொறுப்பேற்றார் கேப்டன் விஜயகாந்த். அவர் தலைவராக பொறுப்பேற்ற பின்பு தான் தெரிகிறது இந்த சங்கம் மிகப்பெரிய கடலில் தவித்து வருகிறது என்பதும், இன்னும் கொஞ்ச நாட்களில் கடனால் சங்கம் இருந்த இடம் தெரியாமல் அழியும் சூழ்நிலையில் உள்ளது என்பது வெளிச்சத்திற்கு வருகிறது.

இக்கட்டான சூழ்நிலையை புரிந்து கொண்ட கேப்டன் விஜயகாந்த் நடிகர் சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளார். அதற்காக பல யோசனைகளை பலரிடம் கலந்து ஆலோசித்து வந்து இறுதியாக ஒரு முடிவுக்கு வருகிறார். நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் வரக்கூடிய வருமானத்தை வைத்து நடிகர் சங்கத்தின் உடைய கடனை அடைத்து இந்த சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என முடிவு செய்கிறார். அதை அடுத்து தமிழர்கள் அதிகமாக வாழும் சிங்கப்பூர் மலேசியா போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என முடிவெடுத்துள்ளார். அதற்காக பல நடிகர்கள் மற்றும் நடிகர்களிடம் ஒப்புதல் வாங்கும் முயற்சியில் கேப்டன் விஜயகாந்த் இறங்கியுள்ளார்.

ரஜினிகாந்தின் போஸ்டர்களை கிழிக்க வைத்த எம் ஜி ஆர்! நடந்தது என்ன!

அந்த நேரத்தில் இந்த நிகழ்ச்சிகளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கலந்து கொண்டால் மிகச் சிறப்பாக இருக்கும் மேலும் ரஜினியின் வருகையால் அதிக கூட்டம் கூடும் நல்ல வசூலும் கிடைக்கும் இதன் மூலம் கடனை மிக விரைவில் அடைத்து விடலாம் என்ற எண்ணம் விஜயகாந்தின் மனதில் தோன்றியுள்ளது. ஆனால் அவருடன் இருக்கும் நண்பர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு இல்லை என கூறியுள்ளனர். அதற்கு விஜயகாந்த் நாளை நாம் ரஜினியை சந்திக்கலாம் என முடிவெடுத்து இருந்தார்.

அதன்படி அடுத்த நாள் நடிகர் ரஜினியை நேரில் சந்திக்க வருவதாக விஜயகாந்த் கூறியிருந்தார். விஜயகாந்த் மற்றும் அவருடன் கலை நிகழ்ச்சி விழா நடத்தும் உறுப்பினர்கள் வருகை தருவதை அறிந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி தன் வீட்டு வெளியே வந்து அவர்களுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தார். வீட்டிற்குள் நுழைந்த நடிகர் விஜயகாந்த் உள்ளே செல்லாமல் முற்றத்திலேயே அமர்ந்துவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத சூப்பர் ஸ்டார் விஜி விஜி ப்ளீஸ் எழுந்திரிங்க உள்ளே உட்காரலாம் என வேண்டி கேட்டுக்கொண்டார்.

அதற்கு கேப்டன் விஜயகாந்த் நம் நடிகர் சங்கம் கடனில் மூழ்கும் நிலைமையில் உள்ளது. இதற்காக மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் கலை நிகழ்ச்சி நடத்த நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் அதற்கு சம்மதம் கொடுத்தால் மட்டுமே நான் முற்றத்திலிருந்து எழுந்து உங்கள் வீட்டிற்குள் வருவேன் என போராடியுள்ளார். உடனே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உம் சரி என சம்மதித்துள்ளார். தனக்கு இணையாக கோடிக்கணக்கான ரசிகர் கூட்டத்தைக் கொண்ட நடிகர் ஒருவர் பொது நலனிற்காக இறங்கி வருவதை நினைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பெருமிதத்தில் அந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து அந்த விழாவில் நடிகர் கமலஹாசன், விஜய், அப்பொழுது மிகப் பிரபலத்தில் இருந்த பிரசாந்த், சிம்பு, பிரபுதேவா என பல நடிகர்கள் இணைந்து அந்த நிகழ்ச்சியை நடத்தினர்.

பல முன்னணி நடிகர்கள் இணைந்து பல நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்தி மக்களுடைய செல்வாக்கைப் பெற்று அதன் மூலம் கிடைத்த வருவாயை கொண்டு சங்கத்தின் கடனை அடைத்து பெருமகிழ்ச்சியில் ஆழ்த்தினார் புரட்சிக் கலைஞர் கேப்டன்.இவ்வளவு பெரிய சாதனையை செய்து நடிகர் சங்கத்தை காப்பாற்றிய கேப்டன் புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களுடைய பெயரை நடிகர் சங்க கட்டிடத்துக்கு சூட்ட வேண்டும் என்று பொதுமக்களும் ரசிகர்களும் பல்வேறு நடிகர்களும் நடிகைகளும் குரல் கொடுத்து வருகிறார்கள்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...