நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வியந்து பாராட்டிய முன்னணி பிரபல நடிகை! வாய்ப்புக்காக காத்திருந்த ஹீரோக்கள்!

By Velmurugan

Published:

இந்திய சினிமாவில் நடிப்புக்கு பெயர் பெற்ற நடிகர் மற்றும் நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்கள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு மிகப்பெரிய முன் உதாரணமாக வாழ்ந்து வந்தார். பல முன்னணி நடிகர்களுக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக இருந்தாலும் நடிகர் திலகம் சிவாஜி மிகவும் உயர்த்தி பாராட்டிய நடிகையும் தென்னிந்திய தமிழ் சினிமாவில் இருந்துள்ளனர். அந்த வகையில் நாடக நடிகராக இருந்து 1952 ஆம் ஆண்டு வெளியான பராசக்தி திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானவர் தான் சிவாஜி கணேசன். அதை தொடர்ந்து பல வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ளார். நடிப்பு கலைக்கு முன்னுதாரணமாக நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்து வந்ததாக அறிஞர் அண்ணா உள்ளிட்ட பல முன்னணி தலைவர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். அதை போல் தன் வாழ்நாளில் இறுதிவரை படங்களில் நடித்து வந்த சிவாஜி கணேசன் இறுதி காலகட்டத்தில் கமல் ரஜினி உள்ளிட்ட அடுத்த தலைமுறை ஹீரோக்களுடனும் இணைந்து நடித்து வந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிப்பின் பல்கலைக்கழகம் என அனைவரும் போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்கள் தன்னைவிட சிறப்பான நடிகை ஒருவர் இருக்கிறார். அவரை போல யாராலும் நடிக்க முடியாது என நடிகை பானுமதியை வியந்து பாராட்டி உள்ளார்.

நடிப்பு பல்கலைக்கழகம் என போற்றப்படும் சிவாஜி கணேசன் அவர்கள் இன்றைய தலைமுறை நடிகர்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தாலும் அவரே உயர்ந்து பாராட்டிய நடிகையும் தென் இந்திய சினிமாவில் இருந்திருக்காங்க என்பது தான் ஆச்சரியம்.

பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியில் முடிந்த எம்ஜிஆரின் சில படங்கள்!

1950 களில் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை பானுமதி. அந்த காலத்தில் முன்னணி ஹீரோவாக இருந்த பல நடிகர்களும் பானுமதியுடன் இணைந்து ஒரு படத்தில் ஆவது நடிக்க வேண்டும் என்பதை மிகப்பெரிய ஆசையாக வைத்திருந்தனர்.இந்திய சினிமாவில் நடிகை, இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என பன்முகத்தன்மை கொண்ட நடிகை தான் பானுமதி. 1939 ஆம் ஆண்டு சந்தன தேவன் என்ற படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் உடன் இணைந்து அலிபாபாவும் 40 திருடர்களும் ,மதுரை வீரன், ராஜா தேசிங்கு பல படங்களில் நடித்துள்ளார். கள்வனின் காதலி, ரங்கோன் ராதா இன்னும் சில படங்களில் பானுமதியுடன் இணைந்து சிவாஜி கணேசன் நடித்துள்ளார்.

அந்த நேரத்தில் பானுமதி என்னும் பெரிய நடிகையுடன் இணைந்து சில படங்களில் நடித்ததே எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு என நடிகர் சிவாஜி குறிப்பிட்டுள்ளார். மேலும் பானுமதி மாதிரி ஒரு நடிகையை பார்க்கவே முடியாது. பேராற்றல் கொண்ட அவருடன் நடித்தது மிகப்பெரிய அனுபவம். நான் சின்ன பையனாக இருந்தாலும் அவர்களோடு நடித்தது என்பது எனக்கு மிகப் பெரிய பாக்கியம் மற்றும் பெருமை. எம்ஜிஆர் சிவாஜியை தொடர்ந்து ஜெமினி கணேசன் அவர்களும் பானுமதியுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆசையில் இருந்துள்ளார். 1956 ஆம் ஆண்டு சதாரம் என்ற படத்தின் மூலமா பானுமதியுடன் இணைந்து நடித்திருக்கிறார் ஜெமினி கணேசன்.