பெரிய எதிர்பார்ப்பில் வெளியாகி தோல்வியில் முடிந்த எம்ஜிஆரின் சில படங்கள்!

தமிழ் சினிமாவில் மக்கள் திலகம் எம்ஜிஆர் பல வெற்றி படங்களை அடுத்தடுத்து கொடுத்துள்ளார். எம்ஜிஆர் படங்களுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்த நிலையிலும் சில எம் ஜி ஆரின் படங்கள் தோல்வி அடைந்துள்ளது. அந்த வகையில் முதலாவதாக நாம் பார்க்கும் திரைப்படம் கூண்டுக்கிளி. 1954இல் டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிவாஜி கணேசன் மற்றும் எம் ஜி ஆர் என இரு முக்கிய நட்சத்திரங்களும் இணைந்து நடித்திருந்தனர். பெரிய எதிர்பார்ப்பு கிடையில் உருவான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என அந்த காலத்து திரை ரசிகர்களால் நம்பப்பட்டது. ஆனால் இந்த திரைப்படம் வெற்றியை அடையவில்லை, அதற்கு மாறாக இந்த இரண்டு பெரிய நட்சத்திரங்களின் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய போட்டி ஏற்பட்டு படம் தோல்வியில் அமைந்தது.

அடுத்த திரைப்படம் ராஜா தேசிங்கு. 1960 இல் தேசிங்கின் வாழ்க்கையை மையமாக வைத்து எம்ஜிஆர் நடிப்பில் உருவாகி இருக்கும். இந்த திரைப்படம் பெரியளவு வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சரியாக ஓடவில்லை. அடுத்த திரைப்படம் மன்னாதி மன்னன் 1960 இல் வெளிவந்த இந்த திரைப்படமும் பெரிதளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திரையரங்குகளில் 100 நாட்களை தொடாமல் 80 நாட்கள் ஓடி சுமாரான வெற்றியை பெற்றது. அடுத்த திரைப்படம் ராணி சம்யுக்தா. மதுரை வீரன் வெற்றி படத்தை இயக்கிய டி. யோகானந்த் இயக்கத்தில் 1962 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய தோல்வியை அடைந்தது. இதற்கு அடுத்த வருடம் வெளியான கலையரசி திரைப்படமும் நிறைய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி தோல்வியை தழுவியது.

பி எஸ் வீரப்பாவினுடைய தயாரிப்பில் ஆனந்த ஜோதியும், கலைஞர் வசனத்தில் காஞ்சி தலைவனும் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படங்களும் சரியாக போகவில்லை. அடுத்து என் கடமை, ஆசை முகம், தாழம்பூ படங்களும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமாராகத்தான் போனது. மேலும் பணம் படைத்தவன், கலங்கரை விளக்கம், பறக்கும் பாவை போன்ற படங்களும் 100 நாள் ஓடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 நாட்கள் வரை ஓடி நின்று விட்டது. அடுத்து சந்திரோதயம், தனிப்பிறவி, தாய்க்கு தலைமகன், அரசகட்டளை போன்ற படங்களும் எதிர்பார்க்க அளவு போகவில்லை.

மேலும் கண்ணன் என் காதலன் திரைப்படம் 80நாட்கள் வரை ஓடியது. அடுத்து பி ஆர் பந்தலுவின் இயக்கத்தில் வெளிவந்த தேடிவந்த மாப்பிள்ளை திரைப்படமும் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 75 நாட்கள் வரை ஓடியது. அடுத்து நீரும் நெருப்பும் படமும் நன்றாக ஓடும் என அந்த நேரத்தில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மதுரையில் மட்டும் 90 நாட்கள் வரை ஓடி 100 நாட்கள் இழந்தது. சென்னை மற்றும் பல நகரங்களில் 75 நாட்கள் வரை ஓடியது .

சௌகார் ஜானகி இடம் அடித்து பேசிய சிவாஜி! உயர்ந்த மனிதன் படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான சம்பவம்!

அடுத்ததாக பட்டிக்காட்டு பொன்னையா. எம்ஜிஆர் இரட்டை வேடங்களில் நடித்த கலர் படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு 75 நாள் ஓடியது. மேலும் சங்கே முழங்கு, நாளை நமதே, உழைக்கும் கரங்கள், ஊருக்கு உழைப்பவன் படங்களும் அந்த நேரத்தில் அதிகப்படியான விளம்பரத்தை பெற்றிருந்தது. ஆனால் 75 நாட்கள் வரை தான் ஓடியது, 100 நாள் போகவில்லை. அடுத்து ஏ பி நாகராஜ் இயக்கத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த படம் தான் நவரத்தினம் இந்த படமும் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...