சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களைத் தெறிக்க விட்டுள்ளன. இந்தப் படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூலை ஈட்டி விட்டது.
இந்தப் படத்தில் ஜாக்கி ஷெராப், விநாயகன், சிவராஜ்குமார் என 3 முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். தமன்னாவின் காவாலா டேன்ஸ் தான் தற்போது ட்ரெண்டிங். தமன்னாவுக்கும் பெரிய பிரேக் கொடுத்துள்ள படம் இதுதான்.

எங்கு பார்த்தாலும் ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் இந்தப் பாடலுக்குத் தான் நடனம் ஆடுகின்றனர். சூப்பர்ஸ்டாரும் இந்தப் பாடலில் தமன்னாவுடன் இணைந்து நடனம் ஆடி அசத்தியுள்ளார்.
இந்தப்படத்தில் நடித்த கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகன் சிவராஜ்குமார் பற்றி இப்போது பார்ப்போம்.
ஜெயிலர் படத்தில் முக்கிய கேரக்டரில் வரும் சிவராஜ்குமார் சினிமாவுக்கு வந்தது எப்படி? அவரை அறிமுகப்படுத்தியது யார் என்று பார்ப்போமா…
கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமார், பார்வதி அம்மாள் தம்பதியினருக்கும் சென்னையில் 12.7.1962ல் மூத்த மகனாகப் பிறந்தார். இவரோட இயற்பெயர் நாகராஜூ சிவன் புத்தசாமி. தன்னோட 30 ஆண்டுகாலத்தில் 120க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். சிவராஜ்குமார் சென்னையில் பள்ளிப்படிப்பை முடித்து பிஎஸ்சி கெமிஸ்ட்ரி படித்துள்ளார்.
இயக்குனர் கே.பாலசந்தர் 1983ல் ராஜ்குமாரிடம் அவரது மகனை சென்னையில் உள்ள ஆக்டிங் ஸ்கூலில் சேர்க்க பரிந்துரைத்தார்.
அதுக்கு ராஜ்குமார் சிவாவுக்கு இதில் எல்லாம் ஆர்வம் இருக்குமா என்று தெரியவில்லை என்கிறார். அதற்கு கண்டிப்பாக அவனை சேர்த்து விடுங்க. நிச்சயமா பெரிய ஆளா வருவான் என பாலசந்தர் சொல்கிறார்.

கல்லூரி படிப்பின்போதே குச்சிப்புடி நடனமும் கற்றுக் கொள்கிறார். இவரது 12 வயசிலேயே அப்பாவுடன் சேர்ந்து ஸ்ரீஸ்ரீனிவாசா கல்யாணம் என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இந்தப்படம் சூப்பர்ஹிட். ஆனால் இவரது தம்பி புனித் ராஜ்குமார் நிறைய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் ராஜ்குமாரின் நண்பர். ராஜ்குமாரின் வேண்டுகோளின்படி சிவராஜ்குமாரை சிங்கீதம் சீனிவாச ராவ் இந்தியில் ஆனந்த் என்ற படத்தில் 1986ல் அறிமுகப்படுத்தினார். படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மைக்கேல் மதன காமராஜன், ராஜபார்வை, அபூர்வசகோதரர்கள், பாசவலை போன்ற கமல் படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


