இயக்குநர் கதிர் இயக்கத்தில் 1999-ல் வெளிவந்த திரைப்படம் தான் காதலர் தினம். அப்போது ஏ.ஆர்.ரகுமான் இசை புயலாய் இந்திய சினிமாவையே ஆட்டிப் படைக்க அதற்கு இந்தப் படமும் தப்பவில்லை. வாலிபக் கவிஞர் என ஏன் வாலியைக் குறிப்பிடுகிறோம் என்பதற்கு காதலர் தினம் படப் பாடல்கள் ஒரு நல்ல எடுத்துக்காட்டு. படமும் சூப்பர் ஹிட் ஆனது. பாடல்களும் இன்றும் இளமைத் துள்ளலுடன் இருக்கின்றன. இந்தப் படத்தின் மூலம் நாயகாக அறிமுகமானவர்தான் நடிகர் குணால்.
ஆனால் இதற்கு முன் இந்தப் படத்தில் நாயகனாக நடிக்கவிருந்தவர் யார் தெரியுமா. நடிகர் ஷாம். மதுரையில் பிறந்த நடிகர் ஷாம் பெங்களுரில் வளர்ந்து மாடலிங் துறையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சினிமா வாய்ப்புக்காக முயற்சி செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் தான் காதலர் தினம் படத்தின் ஆடிஷன் நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட ஷாம் ஹீரோவாக தேர்வானார். அதன்பிறகு அவரை வைத்து போட்டோ ஷுட் நடத்தப்பட்டது.
மாமன்னன் பாடலைப் பாட மறுத்த வடிவேலு.. ஏ.ஆர்.ரஹ்மான் செய்த அந்த ஒரு மேஜிக்
ஆனால் போட்டோஷுட்டில் அவரது முகம் இந்தக் கதைக்கு ஏற்றபடி இருக்கவில்லை. இந்தக் கதையின் ஹீரோ கிராமத்திலிருந்து நகரத்திற்கு படிக்க வரும் இளைஞன் என்பதால் மாடலிங் துறையில் இருந்த ஷாம் இந்த கதாபாத்திரத்திற்கு அவரது பொருந்தவில்லை. இதன்பிறகு தான் இந்தப் படத்திற்கு குணால் தேர்வானார். எனினும் முயற்சியைக் கைவிடாத ஷாம் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த குஷி படத்தில் விஜய்யின் நண்பராக நடித்தார்.
ஆனால் அதற்கு அடுத்தபடமே இயக்குநர் ஜீவாவின் 12பி வாய்ப்பு கிட்டியது. முதல்படத்தில் தான் நடித்த முதல் படத்தில் ஹீரோயினாக நடித்த ஜோதிகா இவரின் முதல் ஹீரோவாக அறிமுகமான படத்திலும் நடித்தார். சிம்ரனும் நடித்திருப்பார். இப்படி இவருக்கு முதல் படமே ஜோதிகா, சிம்ரன், விவேக், ஹாரிஸ் என மெகா கூட்டணியுடன் வந்து 12பி வெற்றியைப் பெற்றது.
தொடர்ந்து லேசா லேசா, உள்ளம் கேட்குமே, இயற்கை என டபுள் ஹீரா சப்ஜெக்டிலும் நடித்து வெற்றிகளைக் கொடுத்தார். மேலும் 6 மெழுகுவர்த்திகள் என்ற படம் இவரது நடிப்புத் திறனுக்கு தீனி போட்ட படமாக விளங்கியது. தொடர்ந்து தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் ஷாம்.