மாமன்னன் பாடலைப் பாட மறுத்த வடிவேலு.. ஏ.ஆர்.ரஹ்மான் செய்த அந்த ஒரு மேஜிக்

‘வைகைப் புயல்’ வடிவேலு காமெடி மட்டுமல்லாது பல பாடல்களையும் பாடியுள்ளார். அவற்றில் பெரும்பாலான பாடல்கள் குத்துப் பாடல்களாகவே அமைந்துள்ளன. காலம் மாறிப் போச்சு படத்தில் ‘வாடி பொட்ட புள்ள வெளியே..’ பொற்காலம் படத்தில் ‘ஊனம் ஊனம் ஊனம் இங்கே..’ காதலன் படத்தில் ‘பெட்டராப்..’ மேலும் ‘எட்டணா இருந்தா எட்டு ஊறு என் பாட்டைக் கேட்கும்..’ சச்சின் படத்தில் போடாங்கோ போன்ற பல ஹிட் பாடல்களைப் பாடியிருக்கிறார்.

இப்படி திரையில் பல பாடல்களைப் பாடியவர் ஒரு கட்டத்தில் நடிப்பில் இருந்து நீண்ட இடைவெளி எடுத்தார். 2010ம் ஆண்டிற்குப் பின் வடிவேலுவின் திரைப்பயணம் சரிய ஆரம்பித்தது. ஹீரோவாக நடித்த படங்களான தெனாலி ராமன், எலி, நாய் சேகர் போன்ற படங்களும் மண்ணைக் கவ்வியது.

இதனைத் தொடர்ந்து வடிவேலுவின் சினிமா வாழ்க்கை அவ்வளவுதான் என்றிருந்த வேளையில் மாமன்னன் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த முறை காமெடியனாக இல்லை. கதையின் முக்கிய நாயகனாய். இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னனில் வடிவேலுவின் இதுவரை பார்த்திராத நடிப்பை அவரிடமிருந்து வாங்கியிருந்தார். வடிவேலுவுக்கு இப்படிக் கூட நடிக்க வருமா என திரையுலகமே ஆச்சர்யப்பட்டது.

இப்படி மாமன்னன் மூலம் ரிஎன்ட்ரி கொடுத்த வடிவேலு அந்தப் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ‘மலையிலதான் தீப்பிடிக்குது ராச.. என் மனசுகுள்ள வெடி வெடிக்குது ராசா..’ என்ற பாடலைப் பாடியிருப்பார். இந்தப் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வடிவேலுவை பாட வைக்கலாம் என்று சொன்ன போது வடிவேலு அதை முதலில் மறுத்திருக்கிறார். நீண்ட நாட்களாகி விட்டது என ஒதுக்க ஏ.ஆர்.ரஹ்மான் இவரின் குரல் வளத்தை நன்கு அறிந்தவர். எனவே இந்தப் பாடல் அவருக்கு நல்ல பெயரைக் கொடுக்கும் என்பதால் பயிற்சி எடுக்கச் சொல்லியிருக்கிறார்.

நீ அதிர்ஷ்டக்காரன்டா.. இளையராஜாவைப் பாராட்டிய கண்ணதாசன் எதற்கு தெரியுமா?

இந்தப் பாடலானது மலைக்கிராமங்களில் வசிக்கும் குழந்தைகள் அங்கே காட்டுத் தீ ஏற்படும்போது படிக்கும் நாட்டுப்புறப் பாடலாகும். இதிலிருந்த வரிகளைப் போட்டு யுகபாரதி முழுப் பாடலையும் எழுதியிருப்பார். இப்படி இந்தப் பாடலை வடிவேலு எவ்வளவோ முயற்சி செய்தும் படிக்க இயலாமல் போக, வடிவேலுவை ஏ.ஆர்.ரஹ்மான் அழைத்து முதலில் உங்களுக்குப் பிடித்த சினிமாப் பாடல்களைப் பாடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

வடிவேலு இயற்கையாகவே பழைய பாடல்களை அப்படியே ராகத்தோடு பாடுவார் என்பதால் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். பின்னர் நாகூர் ஹனிபா பாடல்களைப் பாடுங்கள் என்று கூற அதிலிருந்தும் சில பாடல்களைப் பாடிக் காட்டியிருக்கிறார் வடிவேலு.

இப்போது ஏ.ஆர். ரஹ்மான் வடிவேலுவுக்கு ஒரு ஐடியா சொல்லித் தந்திருக்கிறார். நாகூர் ஹனிபா பாடலைப் பாடினீர்களே அதேபோன்று இந்தப் பாடலையும் பாடுங்கள் என்ற கூற, அடுத்த அரைமணிநேரத்தில் மொத்த பாடல் பதிவும் முடிந்திருக்கிறது. இதன்பின் பதிவுசெய்யப்பட்ட பாடலைக் கேட்டு வடிவேலு மெய்சிலிர்த்துப் போயிருக்கிறார். இப்படி உருவானதுதான் மாமன்னன் படப் பாடல்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...