பாகுபலி படத்தில் நடித்திருந்தவர் ராணா. இப்படத்தில் பல்வாள் தேவன் என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார் இக்கதாபாத்திரம் மிகுந்த வரவேற்பை பெற்றது.

இவர் தமிழில் பெங்களூர் நாட்கள், அஜீத் நடித்த ஆரம்பம் படங்களிலும் நடித்துள்ளார்.
இவர் சமீப நாட்களாக மிக மிக மோசமாக மெலிந்த தேகத்துடன் காணப்படுகிறார். உடல் நிலை எதுவும் சரியில்லையோ என பலர் நலம் விசாரித்ததற்கு அதெல்லாம் ஒன்றுமில்லை. அடுத்து தான் நடிக்கும் விரதபர்வம்1992’ படத்திற்காகவே தனது உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
