முதல்வன் இன்டர்வியூ ஷுட்டிங் முடிந்து அர்ஜுனுக்கு போன் செய்த ரகுவரன்.. என்ன சொன்னார் தெரியுமா?

By John A

Published:

தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குநர் ஷங்கர் என்றால் அவர் இயக்கிய படங்களில் ஐகானிக் படமாக அமைந்தது முதல்வன் திரைப்படம். 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக முதல்வன் படம் விளங்குகிறது. இன்றும் இந்தப் படத்தை டிவியில் பார்க்கும் போது உட்கார்ந்த இடத்தை விட்டு எழ மனமே வராது. அந்த அளவிற்கு ரசிகர்களைக் கட்டிப்போட்ட திரைப்படம் முதல்வன்.

முதல்வன் படத்தில் இன்றும் மீம்ஸ்களிலும், பஞ்ச் டயாக்குகளிலும் சுழன்று வரும் ஒரு காட்சி என்றால் அது அர்ஜுன், ரகுவரன் நேர்காணல் காட்சி தான். தமிழ் சினிமாவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படக் காட்சிகளில் இந்தக் காட்சி டாப் 10-ல் இருக்கும் என்பதில் சந்தேகேமேயில்லை. இந்தக் காட்சியில் ரகுவரன்-அர்ஜுன் இடையே நடக்கும் உரையாடல்கள் 90-ஸ் கிட்ஸ்-க்கு அத்துப்படி என்றே சொல்லாம்.

முதல்வன் இந்தக் காட்சி ஷுட்டிங் நடைபெறப் போகும் நாளன்று மொத்த டீமே பரபரப்பாக இருந்ததாம். இயக்குநர் ஷங்கர் நள்ளிரவு வரை இந்தக் காட்சியை செதுக்கிக் கொண்டிருந்தாராம். மறுநாள் ஷுட்டிங் நாளான்று அர்ஜுன் மற்றும் ரகுவரன் ஆகிய இருவருமே இந்தக் காட்சியில் மிகச் சிறப்பாக நடிக்க வேண்டும் என உறுதி பூண்டு நடித்திருக்கிறார்கள். ஷங்கர் அர்ஜுனிடம் இந்தக் காட்சியில் உங்கள் முக பாவனைகள் நொடிக்கு நொடி மாற வேண்டும், ஒரு பதட்டம் இருக்க வேண்டும் எனச் சொல்லியிருக்கிறார்.

வாழை திரைப்படம் எப்படி இருக்கு? வலியை அழுத்தமாகப் பதிவு செய்த மாரிசெல்வராஜ்

அதன்படி இருவருக்கும் இடையே காராசாரமான நேர்காணல் விவாதமாக மாறி பின்னர் நீயா? நானா? என்று முடிந்திருக்கும். பொதுவாக நடிகர் ரகுவரன் யாரையும் தொலைபேசியில் அழைத்துப் பேசும் பழக்கம் கிடையாதாம். ஆனால் அன்று அந்தக் காட்சியில் தன்னுடன் நடித்த அர்ஜுனை இரவு போனில் அழைத்துப் பாராட்டியிருக்கிறார். நான் உங்க கிட்ட ஒண்ணு சொல்லனும், காலைல இருந்தே இத சொல்லனும்னு நினைச்சேன். நாம் நடித்த அந்தக் காட்சியில் உங்கள் முக பாவனைகள் ரொம்ப அருமையாக இருந்தது என்று பாராட்டியிருக்கிறார்.

ஒரு கலைஞன் தன்னை விட சிறப்பாக நடித்த மற்றொரு கலைஞனைப் பாராட்டி மகிழ்ந்தது அர்ஜுனுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இன்றும் இந்தக் காட்சியைப் பாருங்கள் அர்ஜுனின் முகம் எப்படி எல்லாம் நொடிக்கு நொடி மாறும் என்று.