நடிகரா, இயக்குநரா, மாஸ்டரா? பிரபுதேவா சொன்ன பளீச் பதில் இதுதான்

By John A

Published:

நடன இயக்குநராக தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த பிரபுதேவா ஆரம்பத்தில் பல படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடி திரையில் தோன்றினார்.  இதயம் படத்தில் ஏப்ரல் மேயிலே, வால்டர் வெற்றிவேல் படத்தில் சின்ன ரோசாவே பாடலும், ஜென்டில் மேன் படத்தில் சிக்குபுக்கு சிக்குபுக்கு ரயிலே பாடலும், சூரியன் படத்தில் இடம் பெற்ற லாலாக்கு டோல் பாடலும் பிரபுதேவாவை அடுத்த லெவலுக்கு செல்ல வைத்தது.

தன்னுடைய நடன அசைவுகளால் ஹீரோ, ஹீரோயின்களின் இடுப்பை சுளுக்கெடுக்க வைத்த பிரபுதேவா இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று புகழப்படுகிறார். ஒல்லியான தேகமும், மாநிறமும், எப்போதும் தாடியுடன் இருக்கும் பிரபுதேவாவை நடிகனாக மக்கள் ஏற்றுக் கொண்டது ஷங்கர் இயக்கிய காதலன் திரைப்படத்தில் தான். ஆனால் அதற்கு முன் இந்து திரைப்படத்திலும் ரோஜாவுடன் ஹீரோவாக நடித்திருப்பார்.

காதலன் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாக தொடர்ந்து நடனம் மற்றும் கதாநாயகன் என இரு குதிரைகளிலும் சவாரி செய்தார். இப்போது டிரண்டிங் பாடலாக இருக்கும் கருகரு கருப்பாயி பாடல் ஏழையின் சிரிப்பில் பிரபுதேவா – ரோஜா கூட்டணியில் உருவான பாடல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. மேலும் யூ டியூப்பில் 151 கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்த மாரி 2-ரவுடி பேபி பாடலும் இவரின் நடனத்தில் உருவானதுதான்.

இந்திய திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் : 58 வயதில் அடியெடுத்து வைக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

இப்படி நடனம், நடிப்பு என்றிருக்க போக்கிரி படம் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். தொடர்ந்து வில்லு, எங்கேயும் காதல், வெடி என தமிழிலும் தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் படங்களை இயக்கி இயக்குநராகவும் ஜொலித்தார்.

தற்போது பேட்டி ஒன்றில் உங்களுக்கு எது சவாலான பணி பிரபுதேவாவிடம் கேட்க மூன்றுமே சவாலான பணி தான். டைரக்டராக இருந்தால் மிகவும் கண்டிப்புடன் இருப்பேன். நானே புரடக்சன் பாய் வேலைகளையும் செய்வேன். ஹீரோயின் செருப்பு விழுந்தால் கூட எடுத்து வருவேன்.  மேலும் மாஸ்டராக இருக்கும் போது வேற மாதிரியாகவும், நடிப்பு என்று வந்துவிட்டால் டைரக்டர்ஸ் சாய்ஸ்தான் என்றும் தெரிவித்துள்ளார்.

Prabudeva-brothers

இவரிடம் நடனம் கற்றுக் கொண்ட பல உதவி நடன இயக்குநர்கள் இன்று முன்னணி சினிமாக்களில் மாஸ்டராக பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவரது சகோதரரான ராஜுசுந்தரம் மாஸ்டர் அஜீத்தை வைத்து ஏகன் திரைப்படத்தை இயக்கினார். மற்றொரு சகோதரரான நாகேந்திர பிரசாத் ரிதம் படத்தில் தனியே தன்னந்தனியே, பம்பாய் படத்தில் ஹம்மா ஹம்மா போன்ற பாடல்களிலும் நடனமாடி பிரபலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மூவரும் இணைந்து 1,2,3 படத்திலும் தங்களுடைய நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருந்தனர்.