இந்திய திரையுலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் : 58 வயதில் அடியெடுத்து வைக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரூக்கான் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ஜவான் திரைப்படம் இந்திய சினிமா வரலாற்றிலேயே 1000 கோடியை வசூலை ஈட்டிய படமானது. அமீர்கானின் ‘தங்கல்‘ படத்திற்கு பிறகு வசூலை வாரிக்குவித்த 2-வது படம் பெருமையப் பெற்றது.

இந்த ஒட்டுமொத்த பெருமைக்கும் காரணம் ஷாரூக்கான் என்ற திரை ஜாம்பவான் தான். தலைநகர் டில்லியில் 1965-ல் பிறந்த ஷாரூக்கான் 1980-களின் பிற்பகுதியில் இந்தி சீரியல்களில் தலைகாட்டத் தொடங்கினார். பின்னர் 1992-ல் ‘தீவானா‘ படம் மூலம் இந்திய சினிமா உலகில் அடியெடுத்து வைக்க பாலிவுட்டில் அதுவரை சூப்பர் ஸ்டாராக இருந்த அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்றோரை ஓரங்கட்டினார்.

அடேங்கப்பா…! இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரின் சொத்து மதிப்பு இவ்வளவா?

மணிரத்னம் இயக்கத்தில் ‘தில்சே‘ படம் தமிழில் ‘உயிரே‘ படமாக வெளியாக ஏ.ஆர். ரகுமான் இசையில் பிரபலமான பாடல்களால் தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். தொடர்ந்து பாலிவுட்டில் இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூலைக் குவிக்க இந்திய சினிமா உலகின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என பெயர் பெற்றார்.

சம்பளம் எவ்வளவு தெரியுமா?

உலக அரங்கில் சினிமா துறையில் அதிக சம்பளம் வாங்கும் நட்சத்திரம் என்றால் அது ஜாக்கிசான் மட்டுமே. ஆனால் இந்திய அளவில் ஷாரூக்கானின் சம்பளத்தை கேட்டால் அரண்டு போய்விடுவீர்கள். ஆம் தற்போதைய இவரின் சம்பளம் ஒரு படத்திற்கு 200 கோடி வரை செல்கிறது. இதற்கு அடுத்ததாக அக்சய் குமார் உள்ளார்.

ஜெயிலர் எல்லாம் ஒதுங்கி நில்லு!.. கில்லியாக வசூல் அள்ளிய விஜய்.. இண்டஸ்ட்ரி ஹிட் அடித்த லியோ!

தற்போது ஷாரூக்கிடம் பி.எம்.டபிள்யூ, ஆடி, லேண்ட் ரோவர் ரேஞ்சர் உள்ளிட்ட விலை உயர்ந்த 12 சொகுசு கார்களும், வெளிநாடுகளில் பங்களாக்களும் இருக்கிறது . உலக அரங்கில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள் பட்டியலில் ஷாரூக்கானும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharukhkhan

ஜவான் தந்த வெற்றி

இயக்குநர் அட்லியின் இயக்கத்தில் உருவான ஜவான் ஷாரூக்கானை மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக நிலைநிறுத்தியுள்ளது. அட்லியின் மீதான விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் கதை மற்றும் கமர்ஷியல் யுக்தி போன்றவற்றை நம்பி ஷாரூக்கான் அட்லிக்கு இயக்கும் வாய்ப்பினைக் கொடுக்க அதை நிரூபித்தும் காட்டியுள்ளார் அட்லி. கிட்டத்தட்ட 1000 கோடிக்கு மேல் வசூலை வாரிக் குவித்து பாலிவுட்டிலும் ஜவான் மூலம் மாஸ் என்ட்ரி கொடுத்துள்ளார் அட்லி.

ஜவானின் வெற்றி களிப்பில் இருக்கும் ஷாரூக்கானுக்கு இன்று (நவ.2) 58 வது பிறந்த நாள். இதையொட்டி ஒவ்வோர் ஆண்டும் ரசிகர்களைச் சந்திப்பது வழக்கம். அதன்படி தனது இல்லத்தில் ரசிகர்களைச் சந்தித்து வாழ்த்துக்களையும் அன்பையும் பரிமாறிக் கொண்டார் ஷாரூக்கான்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews