பிரபல நடிகரும், திமுக முன்னாள் அமைச்சருமான நெப்போலியன் தற்போது குடும்பத்துடன் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். அமெரிக்காவில் ஜீவன் டெக்னாலஜிஸ் என்ற பெயரில் தனியாக சாப்ட்வேர் நிறுவனத்தினை நடத்தி வருகிறார். மேலும் அங்கு விவசாயமும் செய்து வருகிறார்.
தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட தனது மகனின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அவரின் தொடர் சிகிச்சைக்காக அங்கேயே நிரந்தரமாக செட்டிலாகி விட்டார். மேலும் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் தசைசிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மயோபதி என்ற பெயரில் இலவச மருத்துவமனையையும் நடத்தி வருகிறார்.
திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும் போது நடித்து வருகிறார். மேலும் சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றிருந்த போது, அவரை முதல் ஆளாக வரவேற்றது குறிப்பிடத்தக்கது. நெப்போலியன் அமைச்சர் கே.என்.நேருவின் நெருங்கிய உறவினர் ஆவார். அண்மையில் தனது மகனின் திருமணத்தினையும் சிறப்பாக நடத்தினார்.
இந்நிலையில் இன்று நெப்போலியன் தனது சமூக வலைதளப்பக்கத்தில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அதில்,
அன்பு நண்பர்களே, உலகெங்கும் வாழும் தமிழ்ச் சொந்தங்களே,
எங்கள் முத்த மகன் தனுஷ்ன் 8 ஆண்டுகால கனவு ..! இந்தியாவில் பிறந்தாலும் , சூழ்நிலை காரணமாக உலகின் ஒரு கோடியில் இருக்கும் அமெரிக்காவில் வசிக்கும் நாங்கள், மறு கோடியில் இருக்கும் ஜப்பானுக்கு பயணம் செய்ய ஓர் ஆண்டு திட்டமிட்டு , 6 மாத காலமாக செயல்வடிவம் கொடுத்து, ஒரு மாதகாலமாக பயணம் செய்து, உங்கள் அனைவரது வாழ்த்துக்களாலும் ஆசீர்வாதத்தாலும், தனுஷின் ஆசையை நிறைவேற்றி இருக்கிறோம்…!
எல்லையில்லா மகிழ்ச்சி அவனுக்கு…! அளவில்லா மனநிறைவு எங்களுக்கு..! சாதித்து விட்டான். இந்த தருணத்தில் ஒரு சில விசயங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! அதுபோல எங்கள் வாழ்க்கையை தவறாக விமர்சிப்பவர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்..!
கோவிலின் கல்வெட்டில் இடம்பெற்ற வாலி பாடல்.. தாயைப் போற்றி எழுதிய பாடலுக்கு அங்கீகாரம்..
நம் பெற்றோரின் கனவுகளுக்காகவும், நமது கனவுகளுக்காகவும், நம் பிள்ளைகளின் கனவுகளுக்காகவும் அவசியம் வாழ வேண்டும்..! வாழ்ந்து பார்க்க வேண்டும்..! கடமையை நிறைவேற்ற வேண்டும்..! வாழ்க்கை ஒருமுறைதான்..! வாழ்ந்துதான் பார்போமே..!
“அரிது அரிது மானிடராய்ப்
பிறப்பது அரிது..! “
இந்த உலகிற்கு நாம் வரும்போது எதையும் கொண்டு வரவில்லை..! அதுபோல் நாம் இந்த உலகைவிட்டு போகும் போதும் எதையும் கொண்டு போகப்போவதில்லை..!
“யாதும் ஊரே யாவரும் கேளீர்”
“தீதும் நன்றும் பிறர்தர வாரா”
“அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்”
அந்த நினைவுகள் நெஞ்சினில் திரும்பிடத் திரும்பிட ஏக்கங்கள்..!
அவரவர் வாழ்க்கையை அவர்களது மனம்போல் நன்றாக வாழுங்கள்..!
மற்றவரையும் அவர்களது
மனம் போல வாழ விடுங்கள்..!
யார் மனதையும் புண் படுத்தாதீர்கள். குறை கூறாதீர்கள், பழிக்காதீர்கள், உண்மை தெரியாமல் கருத்து சுதந்திரம் என்ற பெயரில் , யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சனம் செய்யாதீர்கள்..! உங்களுக்கும் குடும்பம் இருக்கறது என்பதை மறவாதீர்கள்..!
“ஒரு பக்க சொல் ஓர் யானை பலம்”
எல்லோரையும் வாழ்த்துக்கள்..!
பிடிக்கவில்லை என்றால் இழிவாக பேசாதீர்கள்..! அது உங்களுக்கே ஒருநாள் திரும்பவிடும்..!
எண்ணம் போல்தான் வாழ்க்கை..!
நன்றாக எண்ணுங்கள்..!
சிந்தனையை செயல்படுத்துங்கள்..!
உலகை நீங்களும் வெல்லலாம்..!
முயன்றால் முடியாதது என்று
எதுவுமே இல்லை..!
வாழுங்கள் …! வாழவிடுங்கள்..!
நான் போடுகின்ற ஒவ்வொரு பதிவும், எனது திரையுலகின் நடிப்பையும் நிஜ உலகின் வாழ்க்கையையும், பார்த்து ரசிப்பவர்களுக்கும், எங்களை நேசிப்பவர்களுக்கும், எங்களிடம் அன்பை சுவாசிப்பவர்களுக்கு மட்டும்தான்..!
அனைவருக்கும் கோடானு கோடி நன்றிகள் பல..!
இவ்வாறு அதில் பதிவிட்டிருக்கிறார் நடிகர் நெப்போலியன்.