தமிழ் சினிமாவில் 80 களில் பெண்களின் மனதைக் கொள்ளை கொண்ட ஹீரோ கமல்ஹாசன் என்றால் 90களில் அந்த இடத்தினை அர்விந்த்சாமி பிடித்துக் கொண்டார். அர்விந்த்சாமி போல மாப்பிள்ளை வேண்டும் என்று இன்றும் பெண்கள் மணமகனைத் தேடுவதிலிருந்தே அவருக்கு பெண்கள் மத்தியில் இருக்கும் செல்வாக்கினை அறிந்து கொள்ளலாம். இதனையடுத்து 2000 ஆண்டின் பிற்பகுதியில் அர்விந்த்சாமியின் இடத்தினை பிடித்தவர் நடிகர் மாதவன். மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தின் மூலம் தமிழில் ஹீரோவாக அறிமுகமானாவர் சாக்லேட் பாயாகத் திகழ்ந்தார்.
1970-ல் ஜார்கண்ட் மாநிலம ஜாம்ஷெட்பூரில் நன்கு வசதியான பிராமணக்குடும்பத்தில் பிறந்த மாதவன் படிப்பிற்குப் பின் மாடலிங் துறையில் ஈடுபட்டு வந்தார். இதனிடையே இந்தியில் சீரியல் வாய்ப்புகள் வர மும்பையில் பனேகி அப்னி பாத் என்ற தொலைக்காட்சித் தொடரில் நடிக்க ஆரம்பித்தார்.
இப்படியே சீரியல்களில் சுமார் 1800 எபிசோடுகளில் நடித்ததால் அவருக்கு நடிப்பு என்பது இயல்பாகிப் போனது. இதனையடுத்து 1997-ல் இண்பெர்னோ என்ற ஆங்கிலத் திரைப்படத்தில் நடித்தார். தொடர்ந்து இந்திப் படத்தில் தலைகாட்டத் தொடங்கினார்.
ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த சாமி படம்.. மாசாணி அம்மனாக மிரட்டப் போகும் திரிஷா?
இவரின் நடிப்புத் திறனையும், தோற்றத்தையும் கண்ட மணிரத்னம் அலைபாயுதே படத்தில் ஹீரேவாக ஒப்பந்தம் செய்தார். அப்போது மணிரத்னம் மாதவனிடம் ஒரு வருடம் இப்படத்தின் படப்பிடிப்பு இருக்கும் என்று கண்டிஷன் போட, மாதவன் அப்போது இந்தி சீரியல்களில் பிஸியாக நடித்து பெயருடனும், புகழுடனும் இருந்தார்.
இந்நிலையில் மணிரத்னம் இவ்வாறு கூற நம்பிக்கையுடன் அலைபாயுதே படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார். மேலும் மணிரத்னம், பி.சி.ஸ்ரீராம், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற ஜாம்பவான்கள் இருந்ததால் படம் தோல்வி அடைந்தால் கூட நம் மேல் எந்தக் குறையும் வராது என்று நடித்தார்.
இப்படத்தில் நடித்த போது மணிரத்னம் அவரின் இயல்பான குணத்திலேயே மாதவனை நடிக்க வைத்தார். அதேபோல்தான் ஷாலினிக்கும். படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மாதவனுக்கு சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதும் கிடைத்தது. தொடர்ந்து என்னவளே திரைப்படத்தில் நடித்தார். இதனையடுத்து கௌதம் மேனன் இயக்கிய மின்னலே திரைப்படம் பெரிய வெற்றியைக் கொடுத்து தமிழ்சினிமாவின் நிரந்தர நாயகனாக்கியது.
மேலும் டும் டும் டும், பார்த்தாலே பரவசம் போன்ற படங்களில் நடித்து சாக்லேட் பாயாக வலம் வந்த மாதவனை ஆக்சன் ஹீரோவாக மாற்றியது லிங்குசாமி இயக்கிய ரன் திரைப்படம். இப்படம் 175 நாட்கள் திரையில் ஓடி மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து மாதவன் பிஸியான நடிகராக வலம் வந்தார்.
ஆய்த எழுத்து, கன்னத்தில் முத்தமிட்டால், ஜே ஜே, பிரியமான தோழி போன்ற படங்கள் சூப்பர் ஹிட்டாக அனைவருக்கும் பிடித்த நடிகராக மேடி என்ற செல்லப்பெயருடன் வலம் வந்தார் மாதவன். மாதவனின் படங்களில் பெரும்பாலும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் ஆகும். தொடர்ந்து பல மொழிகளிலும் நடித்து வரும் மாதவன் இந்திய சினிமாவின் முக்கிய நடிகராக வலம் வருவது குறிப்பிடத்தக்கது.