நடிச்சது ஒரு விளம்பரம்.. வந்த 16 கோடியையும் யாருக்காக கொடுத்தார் தெரியுமா கமல்?

By Chandra R

Published:

தமிழ் சினிமாவில் உலகநாயகன் என்ற பெயருக்கு சொந்தக்காரராக விளங்குபவர் நடிகர் கமல்ஹாசன். 5வயதில் இருந்தே இந்த சினிமாவில் கால்பதித்து கிட்டத்தட்ட 60 வருடங்களுக்கும் மேலாக நடித்து வருகிறார் கமல். சினிமாதான் எல்லாமே. சினிமாதான் மூச்சு என சினிமாவுக்காகவே வாழ்ந்து வருபவர். சினிமாவில் வரும் பணத்தை தானே வைத்துக் கொள்ளாமல் சினிமாவில்தான் போட்டார் கமல்.

புது புது தொழில் நுட்பங்கள், புது புது கண்டுபிடிப்புகள் என அத்தனையையும் தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவரும் கமல்தான். எந்த ஒரு டெக்னாலஜி ஆகட்டும் முதலில் அதை எக்ஸ்ப்ளோர் செய்தவர் கமலாகத்தான் இருப்பார். எத்தனை எத்தனை கேரக்டர்கள், வேஷங்கள்? சினிமாவுக்காக தன்னை முழுவதுமாக அர்ப்பணித்துக் கொண்டவர்.

சினிமா ஒரு பக்கம் இருந்தாலும் அரசியலிலும் புதுவித மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும் என முயற்சித்து வருகிறார். ஆரம்பத்தில் கமல் அரசியலில் தீவிரமாக இருந்தார். ஆனால் இப்போது தயாரிப்பு பணியில் அதிகம் கவனம் செலுத்தி வருவதால் கட்சியில் கூட்டணி அமைத்துக் கொண்டார் கமல்.

அவரின் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் இந்தியன் 2. படம் விமர்சனத்திலும் சரி வசூலிலும் சரி. சரியான வரவேற்பை பெறவில்லை. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் தான் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. அதற்கு அடுத்த படியாக அன்பறிவு மாஸ்டர் இயக்கத்தில் ஒரு படத்தில் கமிட் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கமலை பற்றிய ஒரு செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. கமெர்ஷியல் பர்பஸுக்காக கமல் நடித்தது ஒரே ஒரு விளம்பரம்தானாம். அதுவும் அது போத்தீஸ் விளம்பரம் என்று சொல்லப்படுகிறது. அந்த விளம்பரத்துக்காக கமல் வாங்கிய சம்பளம் 16 கோடியாம். அந்த 16 கோடியை எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நன்கொடையாக வழங்கினார் என்ற ஒருதகவல் தான் இப்போது வைரலாகி வருகின்றது.