சும்மா ஆளப் பார்த்து எடைபோடாதீங்க… நடிச்சாருன்னா நாலா பக்கமும் நடிப்பைத் தெறிக்க விடுவாரு…!

By Sankar Velu

Published:

ஜார்ஜ் மரியான். இந்தப் பேரை அடிக்கடி கேள்விப் பட்டிருக்கோம். ஆனால் ஆள் யாருன்னு தெரியலையேன்னு தோணுதா… அது சரி தான். இப்ப உள்ள புதுப்படங்கள்ல பூரா இவருதான நடிக்கிறாரு. பார்ப்பதற்கு கொஞ்சம் குமரிமுத்து மாதிரி இருப்பாரு. லியோவுல வர்றாரு. பாருங்க.

JM
JM

நெப்போலியன் கேரக்டரில் வந்து பட்டையைக் கிளப்புறவரு இவரே தான். உருவத்தைப் பார்த்து ஒருவரை எடை போடக்கூடாது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இவர் தான். இவருடைய பயோகிராபிய பார்ப்போமா…

இவருக்கு சொந்த ஊர் விளாத்திக்குளம். அப்பா அம்மா லவ் மேரேஜ். கலப்புத் திருமணம். ஜார்ஜ்க்கு மனைவி, ஒரு பையன், ஒரு பொண்ணு என சின்ன குடும்பம்.

1985ல பிளஸ் டூ முடிச்சாரு. லயோலா காலேஜ்ல பாரதியார் அகஸ்டின் நடத்துன வீதி நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சார். அப்போ கூத்துப்பட்டறை நடத்திய முத்துச்சாமி மாஸ்டர் கேரளாவுல நாடகம் போட ஆள் கேட்டார்.

அப்போ தான் ஜார்ஜ் மரியான் கூத்துப்பட்டறைக்குள்ள போனார். 1989ல இருந்து 2002 வரை கூத்துப்பட்டறைல 120 நாடகங்கள் போட்டார்.

அதுக்குப் பின்னாடி 2002ல நாசரோட மாயன் படத்தில தான் ஒரு சின்ன ரோல்ல நடிச்சாரு. அதுல பசுபதி உள்பட பல கூத்துக்கலைஞர்கள் நடித்துள்ளனர்.

JM 3
JM 3

காஞ்சீவரம் படத்தில் பிரியதர்ஷன் கிட்ட அஸிஸ்டென்டா ஏ.எல்.விஜய் வேலை பார்த்தார். அவர் தான் ஜார்ஜை அந்தக் கேரக்டருக்கு செலக்ட் பண்ணினார்.

அப்ப இருந்தே விஜய்க்கு ஜார்ஜோட நடிப்பு பிடித்து விட்டது. இவரோட சினிமா வாழ்க்கைல போலீஸ் ரோல் தான் அதிகம். அதே மாதிரி மதராசப்பட்டினத்தில் வாத்தியார் ரோலில் அருமையாக நடித்துள்ளார்.

காஞ்சிவரம், பொய் சொல்லப் போறோம், மதராசப்பட்டினம், தெய்வத்திருமகள், ஆம்பள, கலகலப்பு, மண்டேலா, பிகில், கைதி ஆகிய படங்களில் இவரது நடிப்பு செம மாஸாக இருந்தன.

 

கலகலப்பு படத்தில் காவல்துறை அதிகாரியாக வந்து அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். கைதி படத்தில் நடித்ததற்காக இவருக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆனந்த விகடன் சினிமா விருது மற்றும் ஜீ சினிமா விருதுகள் கிடைத்தன.