லியோ படத்தின் மூலம் மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! நஷ்ட ஈடு மட்டும் இத்தனை கோடியா?

தளபதி விஜய் நடிப்பில் லியோ திரைப்படம் ஆகஸ்ட் 19ஆம் தேதி பிரமாண்டமாக உலக அளவில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இணைந்து நடித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் மற்றும் தளபதி விஜய் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகும் லியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்த நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி தற்போது வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களிலேயே 400 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. வசூலிலும், விமர்சன ரீதியாகவும் கலக்கி வரும் லியோ திரைப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்யும் என்று திரைத்துறையினரால் நம்பப்படுகிறது. அதற்கு ஏற்ப தளபதி ரசிகர்களும் லியோ திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் லியோ திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். சினிமாவில் தற்போதைய சூழலில் முன்னணி நடிகர்களான ஷாருக்கான்,ரஜினி,கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என அனைத்து ஹீரோக்களின் திரைப்படங்களில் இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். அனிருத் இசையமைத்து வெளியாகும் திரைப்படங்கள் மாபெரும் ஹிட் கொடுத்தாலும் பெரும்பாலும் காப்பி சர்ச்சையில் சிக்குவது வழக்கமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தற்பொழுது தளபதி விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் உள்ள பாடலும் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. லியோ திரைப்படத்தில் உள்ள ஆர்டினரி பர்சன் எனும் பாடல் ஒரு ஆங்கில வெப் சீரியஸிலிருந்து திருடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இது குறித்து இந்த பாடலின் உரிமையாளர் தற்பொழுது சமூக வலைதளங்களில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் ஆர்டினரி பெர்சன் எனும் பாடல் விக்கி பிலைண்டர் வெப் சீரிஸில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாக கருத்துக்கள் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் ஆர்டினரி பர்சன் பாடலின் லிரிக் வீடியோ தற்பொழுது யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. அதிலிருந்து பல சர்ச்சைகள் வெடிக்க தொடங்கியது. பாடல் வெளியான சில நிமிடங்களில் இது ஓட்னிக்கா மற்றும் டியூப் லுக் அவர்களின் வெப் சீரிஸில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது என கருத்துகள் தீயாக பரவத் துடங்கியுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஓட்நிக்கா இது குறித்த தகவல் ஒன்றை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். லியோ படம் குறித்து தனக்கு தகவல் அனுப்பிய அனைவருக்கும் நன்றி. தற்போது தன்னுடைய சமூக வலைதளங்களில் அனைத்திலும் தாங்கள் அனுப்பிய குறுஞ்செய்திகள் நிரம்பி வழிகிறது. லியோ படம் குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் இந்த பாடல் சர்ச்சை குறித்த நூற்றிக்கும் மேற்பட்ட தகவல்கள் தன்னை வந்தடைந்துள்ளது. எல்லோரின் தகவலும் என்னால் பார்க்க முடிகிறது. ஆனால் அதற்கு என்னால் பதில் அளிக்க முடியவில்லை.

ரஜினியின் சந்திரமுகி திரைப்படம் ஒரு தோல்வி திரைப்படம் தான்.. இயக்குனர் பி வாசு அதிரடி கருத்து!

மேலும் லியோ திரைப்படத்தில் உள்ள பாடல் காப்பி விவகாரம் குறித்து எனக்கு தெளிவான கருத்துக்கள் இல்லை. நாங்கள் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் விரைவில் அதற்கான உச்சகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஆனால் இது குறித்து யார் மீதும் நான் குற்றம் சாட்ட வில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த பாடல் சர்ச்சைக்காக ஒரு லட்சத்து 85 ஆயிரம் காம்பன்சேஷன் கேட்டு பேச்சு வார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் அனிருத் தரப்பில் அதற்கு வாய்ப்பே இல்லை என மறுத்து மிகக் குறைவான ஒரு தொகை தருவதாக கூறி வருகின்றனர். அனிருத் தர வரும் தொகைக்கு ஒத்துக் கொள்ளாத பட்சத்தில் ஆர்டினரி பர்சன் என்னும் பாடல் youtube இல் இருந்து நீக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக அனிருத் இசையில் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா திரைப்படத்திலும் இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. நெல்சன் இயக்கிய இந்த படத்தில் கல்யாண வயசு தான் வந்துருச்சுடி அந்த பாடல் காபி பிரச்சனையின் காரணமாக யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.