இந்தப் படத்துல உங்க நடிப்பு திருப்தி இல்லைன்னா நீங்க வேண்டாம்.. நடிகர் பகவதி பெருமாளிடம் ஓப்பனாகக் கூறிய புதுமுக இயக்குநர்..

விஜய் சேதுபதிக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்றுதான் 2012-ல் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் திரைப்படம். இப்படத்தில் பகவதி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்தான் பெருமாள். இந்தப் படத்திற்குப்…

Actor buks

விஜய் சேதுபதிக்கு பெரிய வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்றுதான் 2012-ல் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் வெளியான நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம் திரைப்படம். இப்படத்தில் பகவதி என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர்தான் பெருமாள். இந்தப் படத்திற்குப் பிறகு இவரின் பெயர் பக்ஸ் என்று திரை வட்டாரத்தில் பிரபலமாகியது. தனது யதார்த்த நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்து வருபவர். மேலும் வில்லன் குணச்சித்திரம் போன்ற கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து நடித்து வருகிறார் பக்ஸ்.

பிச்சைக்காரன், சூப்பர் டீலக்ஸ், இறைவன், ஜிகர்தண்டா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல படங்களில் நடித்த பக்ஸ்-ஐ புதுமுக இயக்குநர் ஒருவர் உங்களது நடிப்பு திருப்தி இல்லை எனில் தொடர வேண்டாம் என தடாலடியாகக் கூறியிருக்கிறார். அந்தப் படம் புளு ஸ்டார். அசோக் செல்வன், சாந்தனு நடித்த புளு ஸ்டார் திரைப்படம் அரக்கோணம் பகுதி இளைஞர்களின் வாழ்வியலை படம்பிடித்துக் காட்டியது. இந்தப் படத்தில் கிரிக்கெட் கோச் ஆக வருபவர்தான் நடிகர் பக்ஸ்.

அந்த அம்மா இப்ப வந்தாலும் கல்யாணம் பண்ணிப்பேன்.. பழைய காதலை நினைவு கூர்ந்த பாரதிராஜா..

இந்தக் கதபாத்திரத்திற்காக முதலில் யாரைத் தேர்வு செய்யலாம் என இயக்குநர் ஜெயக்குமார் யோசித்துக் கொண்டிருந்த போது இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான இயக்குநர் பா.ரஞ்சித், பகவதி பெருமாளை கை காட்டியிருக்கிறார். ஆனால் இயக்குர் ஜெயக்குமார் அரை மனதுடன் ஒப்புக் கொண்டு பகவதி பெருமாளிடம் போன் செய்து இந்தப் படத்தில் ரஞ்சித் உங்களை பரிந்துரை செய்தார். நான் உங்களை வைத்து 2 நாட்கள் சில காட்சிகள் எடுக்கிறேன். எனக்குத் திருப்தி இருந்தால் மட்டும் நாம் தொடரலாம். இல்லையென்றால் அடுத்த படத்தில் பார்த்துக் கொள்ளலாம் என ஓப்பனாகப் பேசியிருக்கிறார்.

புது இயக்குநரின் இந்த வெளிப்படையாகப் பேசும் தன்மையை அறிந்த நடிகர் பக்ஸ் அவர் கூறியவாறே இரண்டு நாட்கள் நடித்தார். பின் இயக்குநருக்குத் திருப்தியாக அதன்பின்னரே முழு படத்திலும் தொடர்ந்திருக்கிறார். ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரராக இமானுவேல் கதாபாத்திரத்தில் நடிகர் பக்ஸ் தனது பங்கைச் சரியாகச் செய்திருப்பார்.