பாரதிராஜாவால் அறிமுகப்படுத்தப்பட்டு கமல்ஹாசன், ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற ஒருவர் தான் ரேகா. தமிழ் சினிமாவில் டீச்சர் என்றாலே 16 வயதினிலே ஸ்ரீதேவி ஒரு காட்சியில் நடித்தது பலருக்கும் ஞாபகம் வரும். அதற்கு அடுத்ததாக கடலோர கவிதைகள் படத்தில் குடையுடன் வரும் அழகான ரேகா தான் ஞாபகம் வருவார்.
டீச்சர் கேரக்டருக்கு அந்த அளவுக்கு மிக பொருத்தமாக நடிகை ரேகா கடலோர கவிதைகள் படத்தில் நடித்திருப்பார். ஜெனிபர் டீச்சர் என்ற அவரது கேரக்டர் அந்த படம் வெளியான நேரத்தில் பிரபலமாக இருந்தது. 1986 ஆம் ஆண்டு வெளியான கடலோரக் கவிதைகள் என்ற படத்தில் நடிகை ரேகா ஜெனிபர் டீச்சராக நடித்து ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
நடிகை ரேகா கேரளாவை சேர்ந்தவர். அங்கு அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டிருந்த நிலையில் மத்திய அரசு ஊழியராக இருந்த அவரது தந்தைக்கு திடீரென தமிழ்நாட்டில் உள்ள ஊட்டிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் குடும்பத்தோடு ஊட்டிக்கு வந்தார். அங்கு அவர் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகளை தனது தோழிகளுடன் பார்த்துக் கொண்டிருக்கும் போது தான் இயக்குனர் ஒருவரின் கண்களில் பட்டார்.
பிரபல நடிகருடன் நடிக்க மறுத்த நடிகை சில்க் ஸ்மிதா… அவர் அப்ப சொன்ன காரணம் தான் ஹைலைட்டே…
அந்த இயக்குனர் ரேகாவின் வீட்டிற்கு வந்து, பாரதிராஜா ஒரு படத்தை இயக்க இருக்கிறார், அந்த படத்துக்கு நீ பொருத்தமாக இருப்பாய், உனக்கு விருப்பம் என்றால் நான் பாரதிராஜாவிடம் அறிமுகப்படுத்துகிறேன் என்று கூறியுள்ளார். ரேகாவும் அவரது பெற்றோர்களும் அதற்கு சம்மதம் தெரிவிக்க, பாரதிராஜாவிடம் கொண்டு போய் அறிமுகப்படுத்தியவுடன், முதல் பார்வையிலே பாரதிராஜாவுக்கு பிடித்து விட்டது.
நான் கனவில் நினைத்திருந்த ஜெனிபர் டீச்சர் நீதான் என்று கூறிய அவர் கடலோர கவிதைகள் படத்தில் நடிக்க வைத்தார். அந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. கடலோர கவிதைகள் பெற்ற வெற்றி காரணமாக அவருக்கு இரண்டாவது படமே கமல்ஹாசனுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுதான் பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவான புன்னகை மன்னன்.
ரஜினி, கமல் படங்களில் நடிப்பு.. அரசியலிலும் வெற்றி.. ‘வாரிசு’ நடிகையின் வாழ்க்கைப்பாதை..!
இந்த படத்தில் முதல் சில நிமிடங்கள் மட்டும் தான் ரேகாவின் காட்சி என்றாலும் இந்த படத்தின் கதையின் ஜீவனே அவருடைய கேரக்டர் தான். இந்த படம் அவருக்கு ஒரு மறக்க முடியாத படமாக அமைந்தது. இதனை அடுத்து பல திரைப்படங்களில் அவர் நாயகியாக நடித்தார். நம்ம ஊரு நல்ல ஊரு, சொல்வதெல்லாம் உண்மை, ஆண்களை நம்பாதே, எங்க ஊரு பாட்டுக்காரன், காவலன் அவன் கோவலன் என்று பல படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் கடந்த 1987 ஆம் ஆண்டு மட்டும் அவர் 14 படங்களில் நாயகியாக நடித்தார். 1988 மற்றும்1989 ஆம் ஆண்டுகளிலும் அவர் பிஸியான நடிகையாக இருந்தார். பின்னர் ஒரு கட்டத்தில் அவர் அக்கா அண்ணி கேரக்டரில் நடித்தார், சில படங்களில் அம்மா கேரக்டரில் நடித்த ரேகா, தமிழ் சினிமாவில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களிலும் நடித்தார்.
ஜாக்கிசான், கமல்ஹாசனுடன் நடித்த நடிகை.. சொந்தமாக உழைத்து 100 கோடிக்கும் மேல் சம்பாதித்தவர்..!
அதுமட்டுமின்றி அவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்தார். சன் டிவியில் ஒளிபரப்பான வேலன், விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள், பாக்கியலட்சுமி, பாரதி கண்ணம்மா போன்ற சீரியல்களில் நடித்தார். பாரதி கண்ணம்மா சீரியலில் அவர் நடித்த ஷர்மிளா என்ற கேரக்டர் இன்றும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும். அதுமட்டுமின்றி அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.