நடுரோட்டில் Public-ஐ மிரள வைத்த ரகுவரன்.. நிஜத்திலும் வில்லனாக மாறிய சம்பவம்..

By John A

Published:

காலம் காலமாக தமிழ் சினிமாவில் வில்லன்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்ற இலக்கணத்தை உடைத்து தனது குரலாலும், மேனரிசத்தாலும் திரையில் ஹீரோக்களையும், நிஜத்தில் ரசிகர்களையும் அதிர வைத்தவர் ரகுவரன். தமிழ் சினிமாவின் அந்தக் காலத்து வில்லன்கள் எம்.என்.நம்பியார், பி.எஸ்.வீரப்பா, ராதாரவி போன்ற நடிகர்களின் வரிசையில் தனக்கென்று ஒரு தனி பாணியைக் கடைப்பிடித்து ஹீரோக்களை ரசிக்கும் அளவிற்கு தனது வில்லத்தனத்திலும் ரசிக்க வைத்தார் ரகுவரன்.

1983-ல் வெளியான தேசிய விருது பெற்ற திரைப்படமான ஏழாவது மனிதன் படத்தில் அறிமுகமாகி அதன்பின் சில படங்களில் ஹீரோவாக நடித்தார் ரகுவரன். சம்சாரம் அது மின்சாரம் படத்தில் விசுவின் மகன் சிதம்பரமாக நடித்து மிடில்கிளாஸ் ஆண்களின் வாழ்க்கையை திரையில் கொட்டியிருப்பார்.

தொடர்ந்து ஹீரோ மட்டுமின்றி குணச்சித்திர வேடங்களிலும் கலக்கினார் ரகுவரன். அஞ்சலி, என் பொம்முக்குட்டி அம்மாவுக்கு, முகவரி, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் ரகுவரனின் அற்புதமான நடிப்பைப் பார்க்கலாம்.

எனினும் மக்கள் அவரின் வில்லத்தனத்தையே பெரும்பாலும் ரசித்தனர். அதற்கு உதாரணமாக பாட்ஷா, காதலன், முதல்வன், என் சுவாசக் காற்றே, அமர்க்களம் போன்ற படங்களில் கதாநாயகர்களையே தூக்கிச் சாப்பிட்டிருப்பார். ரஜினியின் ஆஸ்தான வில்லனாக பல படங்களில் ஜொலித்தவர்.

கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?

இப்படிபட்ட ரகுவரன் ஒருமுறை காரில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது சாலையில் மற்றொரு காரை அவரின் காரை இடிப்பது போன்று படுவேகமாகச் சென்றதுடன் அதை இருந்தவர்களும் ரகுவரைனை ஏதோ கெட்ட வார்த்தையில் திட்டி விட்டனராம். இதனால் படு கோபமான ரகுவரன் உடனே தனது காரை விரட்டி தன்னைத் திட்டியவர்களின் காருக்கு முன்னால் சென்று மறித்து நிறுத்தி தன் காரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு எவண்டா அவன்.. யாருடா.. எத்தனை பேருடா இருக்கீங்க.. வாங்கடா பார்க்கலாம் என மிரட்ட அதற்குள் கூட்டம் சேர்ந்திருக்கிறது.

வந்திருப்பவர்கள் ஏதோ ஷுட்டிங் என நினைக்க அந்த வழியாக வந்த நாசர் ரகுவரனை சமாதனப்படுத்தி அழைத்துச் சென்றிருக்கிறார். பின்னர் அவரின் காரை அவர் தம்பி எடுத்து வந்திருக்கிறார்.

இப்படி திரையிலும் மட்டுமல்லாது நிஜத்திலும் அநீதி என்று வந்துவிட்டால் பொங்கி எழும் குணம் கொண்டவராகத் திகழ்ந்திருக்கிறார் ரகுவரன் என அவரின் தம்பி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.