கண்ணதாசன், சந்திரபாபு முதல் எஸ்.ஜானகி வரை.. திரையுலகின் பிதாமகர்களுக்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளர்.. இவ்ளோ ஹிட் பாடல்களா?

தமிழ் திரையுலகிற்கு மூன்று பெரும் ஜாம்பவான்களை தனது இசையால் அறிமுகப்படுத்தி பின்னாளில் அவர்களும் புகழின் உச்சிக்குச் செல்வதற்கு அடித்தளமிட்டவர் பழம்பெரும் இசையமைப்பாளர் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. பிரபல இசையமைப்பாளர்கள் கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி ஆகியோருக்கு முன்னோடியாக தமிழ்த்திரையுலகில் விளங்கியவர்.

தென்காசி கடையநல்லூரைப் பூர்வீகமாகக் கொண்ட இவர் தனது இளமைப் பருவத்தில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் சிங்கப்பூர் சென்றுள்ளார். எனினும் சினிமா மீது கொண்ட மோகத்தால் மீண்டும் சென்னை திரும்பி அங்கு வாய்ப்புத்தேடியிருக்கிறார். நடிப்பைக் காட்டிலும் இசையின் மீது பேரார்வம்  கொண்டு முறைப்படி சங்கீதம் கற்றுக் கொள்ள அரம்பித்திருக்கிறார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு.

இவரின் ஆர்வத்தால் விரைவிலேயே இசை பயன்று அப்போது நாடகங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்துள்ளார். தென்னிந்தியத் திரையுலகில் சங்கீதய்யா என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்ட சுப்பையா நாயுடு ஆரம்பத்தில் சில படங்களில் இசையமைத்துக் கொண்டிருந்தார். பின்னர் எம்.ஜி.ஆர் முதன் முதலாகக் கதாநாயகனாக நடித்த ராஜகுமாரி படத்திற்கு இசையமைத்ததன் மூலம் புகழ் பெற்றார்.

‘பன்னீர் புஷ்பங்கள்‘ சாந்தி கிருஷ்ணா இவரோட தங்கையா..? இது தெரியாமப் போச்சே..!

இந்தப் படத்தால் எம்.ஜி.ஆர்.-சுப்பையா நாயுடுவின் நட்பு மலர்ந்தது. தொடர்ந்து எம்.ஜி.ஆரின் பல படங்களுக்கு இசையமைத்தார் சுப்பையா நாயுடு. 1950களின் காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளராக வலம்வந்தார் சுப்பையா நாயுடு.

1949-ல் வெளியான கன்னியின் காதலி என்ற படத்தில் கவிஞர் கண்ணதாசனை திரையுலகில் முதன் முதலாக அறிமுகப்படுத்தினார் எஸ்.எம்.சுப்பையா நாயுடு. இந்தப் படத்தில் கண்ணதாசன் எழுதிய ‘கலங்காதிரு மனமே..‘ என்ற பாடலுக்கு இசையமைத்து கண்ணதாசனின் சினிமா வரவிற்கு பிள்ளையார் சுழி போட்டார்.

மேலும் பிரபல பின்னனிப் பாடகி எஸ்.ஜானகியின் முதல் பாடலான ‘கொஞ்சும் சலங்கை‘ படத்தில் இடம்பெற்ற ‘சிங்கார வேலனே தேவா..‘ என்ற பாடல் மூலம் ஜானகியை அறிமுகப்படுத்தினார். இதுமட்டுமன்றி திரையில் அதுவரை நடித்து வந்த சந்திரபாபுவை ‘குங்குமப் பூவே.. கொஞ்சும் புறாவே..‘ என்ற பாடல் மூலம் அவரையும் பாடகராக அறிமுகம் செய்து வைத்தார்.

எம்.ஜி.ஆரின் பல புகழ்பெற்ற பாடல்களான ‘திருடாதே பாப்பா திருடாதே (திருடாதே), ‘எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே (மலைக்கள்ளன்) ‘நீ எங்கே என் நினைவுகள் அங்கே’ (மன்னிப்பு), ‘தூங்காதே தம்பி தூங்காதே’, ‘கண்ணில் வந்து மின்னல் போல்’ (நாடோடி மன்னன்) என காலத்தால் அழியாத பாடல்களைப் பலவற்றைத் தந்துள்ளார் எஸ்.எம். சுப்பையா.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...