பிரபல தமிழ் இயக்குனர் சுசீந்திரனுக்கு இன்று அதிகாலை ஏற்பட்ட விபத்தினால் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
வெண்ணிலா கபடிகுழு முதல் ’கென்னடி கிளப்’ வரை பல வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் சுசீந்திரன் இன்று காலை வாக்கிங் சென்று கொண்டிருக்கும் போது திடீரென அவர் மீது ஒரு வாகனம் மோதியதில் சுசீந்தரன் படுகாயம் அடைந்தார்
இதனையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருடைய கை எலும்பில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இதனையடுத்து கையில் கட்டு போட்டு உள்ள சுசீந்திரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் அவர் தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் சிகிச்சையுடன் கூடிய ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதால் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
சுசீந்திரனுக்கு விபத்து ஏற்பட்ட தகவல் அறிந்ததும் உடனடியாக மருத்துவமனை சென்ற திரையுலக பிரபலங்கள் அவருடைய உறவினர்களிடம் நலம் விசாரித்து வருகின்றனர்.