சிங்கம் படத்தின் நான்காம் பாகமா? ஓட்டம் பிடித்த ரசிகர்கள்..!!

Published:

தமிழ் சினிமாவின் நடிப்பின் நாயகனாக திகழ்ந்து வருகிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யாவின் சினிமா வாழ்க்கையில் பெரிதும் முக்கியமான இடத்தில் உள்ளது சிங்கம் திரைப்படம். ஏனென்றால் சிங்கம் திரைப்படத்தில் அவர் பேசிய திருநெல்வேலி, தூத்துக்குடி பாசை அனைத்து மக்களிடமும் வரவேற்பு பெற்று படத்திற்கு வெற்றியை கொடுத்தது.

singam suriya

 

இந்த வெற்றியின் பின்னர் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. இந்த திரைப்படம் முழுவதும் தூத்துக்குடியை மையமாகக் கொண்டு கதை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த திரைப்படமும் மக்களிடையே ஓரளவு வரவேற்பைப் பெற்றது. அதன் பின்னர் சிங்கம் படத்தின் மூன்றாம் பாகம் வெளியாகி பெரும் ஏமாற்றத்தை சூர்யாவுக்கு அளித்தது. அதுவும் இந்த படத்தில் காமெடி அந்த அளவிற்கு எடுபடவில்லை என்றே கூறலாம்.

singam

இந்த நிலையில் சிங்கம் படத்தின் நான்காம் பாகம் பற்றிய அப்டேட்டை இயக்குனர் ஹரி கூறியுள்ளார். அதன்படி செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் ஹரி  இது பற்றிய தகவலை வெளியிட்டார்.

ஏனென்றால் இன்றைய தினம் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு கல்யாணம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குனர் ஹரியின் குடும்பத்தார் செய்தியாளரை சந்தித்தபோது சிங்கம் படத்தில் நான்காம் பாகம் வரும் என்றும் அதற்கு முன்னதாக யானை படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கும் என்பதைப்போல் கூறினார் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

மேலும் உங்களுக்காக...

Leave a Comment