இசைஞானி இளையராஜாவுடன் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக நண்பராகவும் அவரது இசை ஆலோசகராகவும் , இசைஞானி இசையமைக்கும் படங்களுக்கு டிரம்மராகவும் இருந்தவர் புரு என்று அனைவராலும் அழைக்கப்படும் புருஷோத்தமன்.
கடந்த வாரம் இவர் உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார். இளையராஜாவின் பாடல்களின் இசைக்கு இளையராஜாவுடன் பெரும்பங்கு வகித்தவர் புருஷோத்தமன். இளையராஜா இசையமைக்க வரும் முன்பே அவர் பணியாற்றிய இசையமைப்பாளர் ஜி.கே வெங்கடேஷிடம் புருஷோத்தமன் அவர்களும் பணியாற்றியவர் ஆவார் அப்போதிருந்தே இருவரும் நண்பர்கள் ஆவர்
அவரின் மறைவு இசைஞானிக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் மறைந்த புருஷோத்தமனுக்கு புகழாரம் சூட்டும் விதமாக அவருடன் இருந்த நாட்களை பழகிய நாட்களை அவரின் மரணத்தால் வேதனையுடன் தனது நினைவாஞ்சலியை வெளியிட்டுள்ளார் . தனது அதிகாரப்பூர்வ யூ டியூப் சேனலில் புருஷோத்தமன் குறித்து பேசியுள்ளார்.