ஜனவரி 26 முதல் 24 மணி நேரமும் கடைகள் இயங்கும்: அமைச்சர் உத்தரவு

மும்பையில் உள்ள விடுதிகள், மால்கள், மல்டிபிளக்ஸ், ஷாப்பிங் மால்கள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே அறிவித்துள்ளார் மும்பை போன்ற பெரு நகரங்களில் 24 மணி…


05123b0f0ef8d27b7efe81f82c972896-1

மும்பையில் உள்ள விடுதிகள், மால்கள், மல்டிபிளக்ஸ், ஷாப்பிங் மால்கள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்கும் என மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே அறிவித்துள்ளார்
மும்பை போன்ற பெரு நகரங்களில் 24 மணி நேரமும் கடைகள், மால்கள் திறந்திருக்க அனுமதிக்க வேண்டும் என கடந்த 20 ஆண்டுகளாக தொழிலதிபர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் இந்த கோரிக்கை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது

மும்பையில் 24 மணி நேரமும் கடைகள் மற்றும் மால்கள் இயங்கும் என்ற அறிவிப்பு மட்டுமன்றி அதற்கான பாதுகாப்பு வசதிகளும் அரசு தரப்பிலிருந்து செய்து கொடுக்கப்படும் என்றும் சிசிடிவி கேமராக்கள் பார்க்கிங் வசதிகள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார்

இதுகுறித்து மும்பை மேயர் கூறுகையில் ’மும்பையில் 24 மால்கள் செயல்பட்டு வருவதாகவும் மிகவும் பிசியாக இயங்கி கொண்டிருக்கும் மும்பையில் சுற்றுலா பயணிகளுக்கும் பயனளிக்கும் வகையில் 24 மணி நேரமும் கடைகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மும்பை போலவே சென்னையிலும் விரைவில் இதே போன்ற வசதி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன