கமல்ஹாசன் பிரபுதேவா இணைந்து நடித்த திரைப்படம் காதலா காதலா. கமலும் நகைச்சுவை செய்வதில் வல்லவர் , பிரபுதேவாவும் நகைச்சுவை செய்வதில் வல்லவர் இருவரும் சேர்ந்தால் கேட்க வேண்டுமா. இப்படத்தில் காமெடியில் இருவரும் பட்டையை கிளப்பினர்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்கள் இப்படத்தில் முருக பக்தராக நடித்திருந்தார்.முழு காமெடி ரோல் செய்திருந்தார் நாகேஷ்,சோ போன்ற காமெடி லெஜண்ட்ஸும் இப்படத்தில் நடித்தது பெரிய பெயரை பெற்றுத்தந்தது.
இவர்கள் போதாது என்று எஸ்.என் லட்சுமி, வடிவேலு, கிரேஸி மோகன், கோவை சரளா என பல நகைச்சுவை கலைஞர்கள் திரும்பிய பக்கமெல்லாம் நடித்திருந்தனர். ரம்பா, செளந்தர்யா கதாநாயகிகளாக நடித்திருந்தனர்.
முழுநீள காமெடி படமாக இப்படம் அமைந்திருந்த இப்படத்தை பல வருட இடைவெளிக்குப்பின் சிங்கிதம் சீனிவாசராவ் கமலை வைத்து இயக்கி இருந்தார்.
கார்த்திக்ராஜா இசையில் காசு மேல காசு வந்து என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் ஆனது. கடந்த 10.4.1998ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தை கமல் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.