2019ஆம் ஆண்டு டுவிட்டரில் சாதனை செய்த விஜய்யின் பிகில்

விஜய் நடித்த பிகில் திரைப்படம் 2019 ஆம் ஆண்டில் அதிக அளவில் ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது 2019ஆம் ஆண்டில் அதிக ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட்டாக விஜய்யின் பிகில் பதிவு செய்யப்பட்டுள்ளதை…

5ea666d8e5c68769884170230e55fe05

விஜய் நடித்த பிகில் திரைப்படம் 2019 ஆம் ஆண்டில் அதிக அளவில் ரீட்வீட் செய்யப்பட்ட டுவீட் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

2019ஆம் ஆண்டில் அதிக ரீடுவிட் செய்யப்பட்ட டுவிட்டாக விஜய்யின் பிகில் பதிவு செய்யப்பட்டுள்ளதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

தென்னிந்திய திரைப்படங்களில் 2019 ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்ட, அதிகம் பகிரப்பட்ட ஹேஷ்டேக்குகள் பட்டியலைப் டுவிட்டர் இணையதளம் சற்று முன் வெளியிட்டது. அதில் குறிப்பாக டுவிட்டர் இணையதளம் தமிழில் பதிவு செய்த டுவீட்டில் கூறப்பட்டுள்ளதாவது

எப்போதும் போல் தமிழ் பொழுதுபோக்கு பிரகாசம். மிகவும் மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட், நடிகர் @actorvijay’s பிகில் பற்றிய இந்த ட்வீட். #Bigil மேலும் இதுவே கருத்தோடு அதிக மறுட்வீட் செய்யப்பட்ட ட்வீட் ஆனது

நடிகர் விஜய் பிகில் பற்றிய டுவிட் ஒன்றை கடந்த ஜூன் மாதம் 21 ஆம் தேதி அன்று தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய் பகிர்ந்தார். அந்த ஒரே ஒரு டுவிட் மட்டும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்களால் பகிரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

பிகில் திரைப்படம் கடந்த தீபாவளியன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்போது டுவிட்டரில் சாதனை செய்ததை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன