மணிரத்னம் இயக்கிவரும் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான போது அந்த அறிவிப்பில் வைரமுத்துவின் பெயர் இல்லை.
ஏற்கனவே இந்த படத்தின் 12 பாடல்களை வைரமுத்து தான் எழுதுவார் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவரது பெயர் நீக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பாடகி சின்மயி அவர்கள் வைரமுத்து மீது மீடூ குற்றச்சாட்டை கூறினார் இதனால்தான் அவரது பெயரை இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது
பொன்னியின் செல்வன் திரைப்படம் மிகப் பெரிய பட்ஜெட் படம் என்பதால் இந்த படத்தில் வைரமுத்து பணிபுரிவதால் சர்ச்சைகள் ஏற்படலாம் என்பதால் தான் அவர் நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது