இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் படம் வந்து 10 வருடங்களை நெருங்கி விட்டது. கார்த்தி, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்தின் பின்பகுதியில் அந்தக்கால சோழ மன்னர்களின் காலத்தை ஒட்டிய ஒரு பகுதி படமாக்கப்பட்டிருக்கும்.
இந்த சோழ மன்னர் கதாபாத்திரத்தில் நடிகர் பார்த்திபன் நடித்திருந்தார். இப்படத்துக்கு பிறகு ஆயிரத்தில் ஒருவன் 2 வரும் என ரசிகர்கள் பலரால் எதிர்பார்க்கப்பட்டது. நடிகர் பார்த்திபனும் ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்கப்படும் என எதிர்பார்த்துள்ளார்.
நேற்று முன் தினம் பிறந்த நாள் கொண்டாடிய செல்வராகவனுக்கு நடிகர் பார்த்திபன் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஆயிரத்தில் ஒருவன் 2 பற்றிய தனது எதிர்பார்ப்பையும் வெளியிட்டுள்ளார்.