இளையராஜா இசையில் ஹிட் அடித்த அந்நிய மொழி பாடல்களை பற்றி பார்த்து வருகிறோம் அந்த வகையில் இன்று ஒரு மலையாள படத்தினை பற்றி பார்க்க இருக்கிறோம். 1985ல்வெளிவந்த யாத்ரா என்ற படம்தான் அது. இளையராஜாவின் ஜனரஞ்சகமான பாடல்கள் இப்படத்தில் வரவேற்பு பெற்றன.
சிறையில் இருந்து விடுபட்ட ஒரு குற்றவாளி உன்னிகிருஷ்ணன் (மம்முட்டி) தனது சோகமான காதல் கதையை பள்ளி பேருந்தில் உள்ள சக பயணிகளுக்குச் சொல்லுவதாக கதை ஆரம்பிக்கிறது. ஒரு அனாதை மற்றும் வனத்துறை அதிகாரி, அவர் ஒரு வனப்பகுதியில் தங்கியிருந்தபோது, துலாசி என்ற உள்ளூர் பெண்ணை காதலிக்கிறார். அவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர், மேலும் அவர் நண்பரிடம் தன் திட்டங்களைப் சொல்வதாக செல்கிறது இப்படியான ஒரு அருமையான காதல் சித்திரமாக இப்படம் 1985ல் வெளிவந்தது. இயக்கி இருப்பது யாரு, வேற யாரு நம்ம இயக்குனர் பாலுமகேந்திராதான். அதனால்தான் இளையராஜாவின் இசை இப்படத்தில் சற்று தூக்கலாக இருந்தது. பின்னணி இசை மிக அருமையாக இருந்தது. தன்னன்ன தன்னன்ன தாளத்தில் ஆடி, யமுனை நதி போன்ற பாடல்கள் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றன. கேட்டு சுவைக்காதவர்கள் இளையராஜாவின் இசையில் வந்த இப்பாடல்களை கீழ்க்கண்ட லிங்கில் கேட்டு சுவையுங்கள். https://www.youtube.com/watch?v=FYK5DIPFp_w https://www.youtube.com/watch?v=iN3kZ11xovA