பிலிம் பற்றாக்குறையால் அடி அடியாகச் செதுக்கிய ‘16 வயதினிலே‘.. மயிலு இப்படித்தான் உருவாச்சு

By John A

Published:

தனது முதல்படத்திலேயே ஸ்டுடியோவிற்குள் சுருண்டு கிடந்த திமிழ் சினிமாவை கிராமத்து பக்கம் அழைத்து வந்து பட்டிக்காட்டிலும் படைப்புகள் தரலாம் என நிரூபித்தவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. தனது முதல் படமான 16 வயதினிலே படத்தின் மூலம் பிரம்மாண்ட வெற்றியைக் கொடுத்து தேசிய விருது வரை கொண்டு சேர்த்தவர். ஸ்ரீதேவி, ரஜினி, கமல், கவுண்டமணி, காந்திமதி என பலருக்கும் பெரிய பிரேக் கொடுத்த படம் அது.

16 வயதினிலே எவ்வாறு உருவானது என்பதை தனது வலைப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் பாரதிராஜா. அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “

’16 வயதினிலே’ படம். முதலில் இதற்கு வைத்த டைட்டில் ‘மயிலு’. என்னுடைய காட்ஃபாதர், முதலாளி எஸ்.ஏ.ராஜ்கண்ணு என்னை அழைத்து ’உங்ககிட்ட என்ன கதை இருக்கு, சொல்லுங்க’ என்றார். நான் என்ன நினைத்தேனென்றால்… அவருக்கு கதையாவது விற்போம் என்று எண்ணிக்கொண்டு, மூன்று கதைகள் சொன்னேன். இசை சம்பந்தப்பட்ட கதை ஒன்று, ’சிகப்பு ரோஜாக்கள்’ கதை ஒன்று, அடுத்து ‘பதினாறு வயதினிலே’ கதை ஒன்று.

அவர், மூன்று கதையில் ‘மயில்’தான் பிடித்திருக்கிறது என்று சொல்லிவிட்டார். ’என்னங்க இது… ஆர்ட் பிலிம் மாதிரி வரும். ஒரு பிளாக் அண்ட் ஒயிட் படமா, குறைந்த செலவுல பண்ணலாம்னு இருந்தேன். ஒருலட்ச ரூபாய்க்குள்ளே பண்ணலாம்னு இருந்தேன். நீங்க கமர்ஷியலா பண்ணும்போது, இந்தக் கதை இடிக்குமே’ என்று சொன்னேன். ’அதெல்லாம் ஒண்ணுமில்ல. டைரக்டரே… இந்தக் கதை ஓகே. நான் சொல்றதைக் கேளுங்க’ என்றார். ’யாருகிட்ட கொடுக்கப்போறீங்க?’ என்றும் கேட்டார்.

“தோட்டுக்கடை ஓரத்திலே.., ஒண்ணாம் படி எடுத்து..,“ நாட்டுப்புறப் பாடல்களின் நாயகி விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன்

நான் நினைத்தேன்… ’எஸ்.பி.முத்துராமனோ, தேவராஜ் – மோகனோ யார்கிட்ட வேணாலும் கொடுங்க’ என்று சொன்னேன். உடனே அவர், ‘நான் ஒரு டைரக்டர் வைச்சிருக்கேன். அவர்தான் பண்ணுவாரு’என்று ராஜ்கண்ணு சொன்னார். அப்படியே பாண்டிபஜாரில் நடந்துபோய்க்கொண்டே இருந்தோம். ‘எனக்கொரு டைரக்டர் இருக்காரு. அவர்தான் டைரக்ட் பண்றாரு டைரக்டரே’ என்று சொல்லிவிட்டு, ஒரு ஐந்து ரூபாயை என் பாக்கெட்டில் வைத்தார். ’நீங்கதான் அந்த டைரக்டர்’ என்றார்.

அப்போதெல்லாம் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உண்டு. சிகரெட்டைப் பற்றவைத்துக்கொண்டு, பாண்டிபஜாரில் பறக்கிறேன்.‘ஆபீஸ் பாருங்க’ என்று சொல்லிவிட்டு சென்றிருந்தார். ஒருபக்கம் ஆபீஸ் தேடிக்கொண்டிருக்கிறேன். இன்னொருபக்கம், பீச்சுக்குப் போய் உட்கார்ந்துவிடுவேன். எப்படி ஷாட் வைக்கவேண்டும் என்றெல்லாம் யோசனை.

நடிகர் திலகம் சிவாஜியை சிரமத்திற்கு உள்ளாக்கிய எம்ஜிஆர் பட இயக்குனர்!

‘மயில்’ என்று தலைப்பிடப்பட்ட படம்தான் ‘16 வயதினிலே’. படத்தை கலரில்தான் எடுக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார் ராஜ்கண்ணு. கலர்ப்படம் என்றால் காஸ்ட்லி. அப்போது ஆர்வோ ஃபிலிம். அப்போதுதான் அறிமுகமாகியிருந்தது. அப்போது ஃபிலிம் கிடைப்பது கஷ்டம். புக் பண்ணவேண்டும். பெங்களூருக்கு வரும். அங்கிருந்து ஒருவர் வாங்கிக் கொண்டு வரவேண்டும். ஆயிரம் அடிதான் கிடைக்கும்.

ஐநூறு ஐநூறு அடியாக கிடைக்கும். ஒரு முகபாவம் எடுத்தால் கூட, பக்கத்தில் பாக்யராஜிடம் எவ்வளவு அடி ஆகியிருக்கிறது என்று கேட்பேன். ‘அஞ்சு அடி சார்’ என்பார். இதையெல்லாம் குறித்துக்கொண்டே வருவோம். இப்படித்தான் படமெடுத்தோம்.

கமல் அப்போது ஓரளவு பிரபலமாகிவிட்ட நடிகர். ஃபிலிம் எங்களுக்கு வருவதற்கு தாமதமாகிவிட்டது. கமலின் கால்ஷீட் வேஸ்ட்டாகி விடக்கூடாதே. அதற்காக என்ன பண்ணினேன் தெரியுமா? கேமிராவில் ஃபிலிமே இல்லாமல் நடிக்க வைத்தேன்.

என்ன என்று கமல் கேட்க, ஆடிப்போய்விட்டேன். ’வேணும்னா படம் நான் கொடுக்கிறேன். இப்படிலாம் படம் எடுக்கக்கூடாது’ என்றார். ‘இல்ல இல்ல… பெங்களூர்லேருந்து ஃபிலிம் வந்துக்கிட்டே இருக்கு. பண்ணிடலாம்’ என்று சொன்னேன். இப்படியெல்லாம் நடந்து, பண்ணப்பட்ட படம் ‘16 வயதினிலே’. அதன் பிறகு, ‘என்ன தேனிக்காரரே… ஃபிலிம் இருக்குல்ல. நடிக்கலாம்ல’ என்று கிண்டல் செய்துகொண்டே இருப்பார்.

நள்ளிரவு 12 மணிக்கு கமலின் வீட்டு கதவைத் தட்டிய தயாரிப்பாளர்! உடனே நடிக்க ஒப்புக்கொண்ட கமல்!

எல்லோருமே அதில் கஷ்டப்பட்டு உழைத்தார்கள். காந்திமதி அம்மா. அவர்கள்தான் எனக்கு செலவுக்குக் காசு கொடுப்பாங்க. தினமும் சிகரெட் வாங்குவதற்கு காந்திமதி அம்மாதான் காசு கொடுப்பார்கள்.”
இவ்வாறு பாரதிராஜா 16 வயதினிலே உருவான விதம் குறித்து பாரதிராஜா அந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.