நடிகர் திலகம் சிவாஜியை சிரமத்திற்கு உள்ளாக்கிய எம்ஜிஆர் பட இயக்குனர்!

சினிமாவில் எந்த ஒரு நடிகராக இருந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என்றால் பல இடங்களில் சற்று கடினமாக உழைக்க வேண்டும். கடினமான முயற்சி மற்றும் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டி இருக்கும். உழைப்பையும் தாண்டி சில அவமானங்களையும் சந்தித்து அதை கடந்து வர வேண்டி இருக்கும். பல அவமானங்கள் முகத்திற்கு நேராக நடக்கும் சில அவமானங்கள் முதுகின் பின்னாடியும் நடக்கும். எவ்வளவு எதிர்மறையான விமர்சனங்களும் அவமானங்களும் நடந்தாலும் அதை பொருட்படுத்தாமல் மீண்டும் முயற்சித்து போராடினால் மட்டுமே தமிழ் சினிமாவில் பிரபலமடைந்த முன்னணி ஹீரோவாக மாற முடியும்.

உதாரணமாக நடிகர் திலகம் சிவாஜி எடுத்துக்கொண்டால் சின்ன வயதில் நாடக கலைஞராக நடித்து அதன் பின் பராசக்தி திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்து மிகப்பெரிய நடிகராக சாதனை படைத்துள்ளார். இது எல்லாம் சிவாஜி குறித்து அனைவரும் அறிந்த தகவலாக இருந்தாலும் நம்மில் பலருக்கு தெரியாத சிவாஜியின் திரை வாழ்க்கையில் மற்றொரு பகுதி ஒன்று உள்ளது. நடிகர் திலகம் சிவாஜியும் வெற்றியின் உச்சத்தை அடைய பல போராட்டங்களை தான் கடந்து வந்துள்ளார்.

அந்தப் போராட்டங்களில் ஒன்றுதான் நடிகர் திலகம் சிவாஜியை ஒரு பிரபல இயக்குனர் ஒருவர் அசிங்கப்படுத்தி வெளியே அனுப்பி விடுகிறார். அதன் பின் ஆறு வருடங்கள் கழித்து அதே இயக்குனர் நடிகர் சிவாஜி கணேசன் இடம் சென்று நீங்கள் இந்த கதையில் நடித்துக் கொடுக்க வேண்டும் என மரியாதை உடன் வேண்டுகோள் வைத்துள்ளார். நடிகர் சிவாஜியை வெளியே அனுப்பிய அந்த இயக்குனர் தான் மீண்டும் சிவாஜி சந்தித்து வாய்ப்புக்காக போராடி உள்ளார். இந்த சம்பவம் குறித்து முழு தகவலையும் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிவாஜிக்கு நடந்த அந்த அவமானம் பராசக்தி படத்தின் படப்பிடிப்பின் போது தான் நடந்துள்ளது. பராசக்தி படத்தில் நடிகர் சிவாஜி கணேசன் தான் நடிக்க வேண்டும் என தேர்வு செய்யப்பட்டிருந்தார். நடிகர் திலகம் சிவாஜியும் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக ஆர்வமாக சூட்டிங் நடக்கும் ஏவிஎம் ஸ்டுடியோவிற்கு வந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நடக்கும் பொழுது மற்றொரு இயக்குனர் ஒருவர் அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்துள்ளார். அப்பொழுது அந்த இயக்குனர் நடிகர் சிவாஜியை நன்கு உற்று கவனித்து விட்டு இந்த நடிகரை வைத்து தான் படம் எடுக்க உள்ளார்களா? இவன் பார்க்க எப்படி இருக்கிறான் இவனை முதலில் வெளியே அனுப்புங்கள் என சிவாஜியின் காதுகளுக்கு கேட்கும் படி உறக்க கத்தி உள்ளார். ஆனால் நடிகர் சிவாஜி இது எல்லாம் கேட்டும் கூட துவண்டு போகாமல் அந்த இயக்குனரின் அருகில் சென்று நான் இந்த படத்தில் நடிக்க வந்திருக்கும் ஒரு நடிகன் எனக்கூறி நடித்துக் காட்டியுள்ளார். அதன் பின் அந்த இயக்குனரும் ஓகே என கூறியுள்ளார்.

யாரு இந்த பவதாரணி.. அவரின் சாதனைகள் என்ன? அறியாத பல தகவல்கள்!

இந்த அளவிற்கு நடிகர் திலகம் சிவாஜியை அவமானப்படுத்திய அந்த இயக்குனர் நடிகர் எம் ஜி ஆர் ஐ வைத்து பல படங்களை இயக்கிய பா நீலகண்டன் அவர்கள் தான். அதன்பின் சுமார் ஆறு வருடங்கள் கழித்து 1958 ஆம் ஆண்டு சபாஷ் மீனா என்னும் திரைப்படத்திற்காக திரைக்கதை எழுதியுள்ளார். இந்த கதையில் நடிகர் சிவாஜி நடிக்க வேண்டும் என்பதற்காக அவரை நேரில் சந்தித்து படத்தில் நடிக்கும் படி வாய்ப்பு கேட்டுள்ளார். முதலில் ஒரு நடிகரின் திறமை என்ன என்பதை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக அவரை அவமானப்படுத்தி விடுகின்றனர் அதன் பின் அவரின் திறமை வெளிச்சத்திற்கு வந்த பிறகு அவரை வைத்து படம் இயக்க வேண்டும் என பலரும் தேடி அலைகின்றனர். இப்படிப்பட்ட நிகழ்வு சிவாஜி கணேசனின் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.

இந்த நிகழ்வை நடிகர் சிவாஜி கணேசன் தனது சுயசரிதையில் என்னை பார்த்து அப்படி கேட்டவர், என்னை நடிக்க அழைத்தார் எனில் வெற்றி யாருக்கு? என குறிப்பிட்டுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.