வித்தியாசமான கதையுடன் 12B படம்.. பாக்யராஜிடம் ஆலோசனை.. கதை புரியாததால் தோல்வி அடைந்த திரைப்படம்..!

தமிழ் சினிமாவில் யாரும் யோசிக்க கூட இல்லாத வித்தியாசமான திரை கதையை ஒளிப்பதிவாளர் ஜீவா யோசித்து அதை அவரே இயக்கவும் செய்தார் என்றால் அது தான் 12B. இந்த படத்தின் நாயகன் இன்டர்வியூக்காக 12B பேருந்தை பிடிக்கச் செல்வார். அந்த பேருந்தை பிடித்திருந்தால் அவரது வாழ்வு எப்படி இருந்து இருக்கும்?

ஒருவேளை அவர் அந்த பேருந்தை மிஸ் செய்து விட்டால் அவரது வாழ்வு எப்படி இருக்கும் என்பது தான் இந்த படத்தின் ஒன்லைன் கதை. சரியான நேரத்திற்கு சென்று பேருந்தை பிடித்து விட்ட ஷாமுக்கு வேலை கிடைத்துவிடும், அதிக சம்பளம் கிடைக்கும், ஆடம்பர வாழ்க்கை கிடைக்கும், சிம்ரனை காதலித்து திருமணம் செய்து கொள்வார் போன்ற காட்சிகள் ஒரு பக்கம் ஓடும்.

அவர போல நடிகர் இங்க யாரும் இல்ல… எம்ஜிஆர் கிட்டயே சிவாஜியை புகழ்ந்த வாலி… என்ன சொன்னார் தெரியுமா..?

அதே நேரத்தில் அந்த பஸ்ஸை அவர் பிடிக்காமல் தவற விட்டு விட்டால் மெக்கானிக் ஷாப்பில் வேலை செய்வது, ஜோதிகாவுடன் காதல் செல்வது, வறுமையுடன் வாடுவது போன்ற வாழ்க்கை வாழ்வார். இந்த இரண்டு விதமான ஷாம் வாழ்க்கையையும் மாறி மாறி இயக்குனர் ஜீவா காட்டியதால் பலருக்கு இந்த படத்தின் திரைக்கதை புரியவில்லை என்று தான் கூற வேண்டும்.

குறிப்பாக இரண்டு விதமான ஷாம் ஒரே நேரத்தில் சந்தித்துக் கொள்வது ஒருவருக்கு ஒருவர் ஹாய் சொல்லி கொள்வதெல்லாம் சுத்தமாக படம் பார்ப்பவர்களுக்கு புரிந்திருக்காது. ஒரே ஒரு காட்சியை தவறவிட்டால் இந்த ஒட்டுமொத்த படமும் புரியாது என்ற வகையில் தான் இருக்கும். மிக திறமையாக இயக்கப்பட்டு இருந்தும் இந்த படம் சுமாராகவே ஓடியது.

இந்த படத்தில் நடிப்பதற்காக முதலில் மாதவன், அஜித், விக்ரம் போன்ற பெரிய ஹீரோக்கள் பரிசீலனை செய்யப்பட்டனர். ஆனால் அதன் பிறகு ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்த ஷாம் ஹீரோ ஆனார். முதல் படத்திலேயே ஷாமுக்கு ஜோடியாக ஜோதிகா, சிம்ரன் என இரண்டு பெரிய ஹீரோயின்கள் மற்றும் முன்னணி காமெடி நடிகர் விவேக் நடித்தனர்.

பாரதிராஜாவின் என் உயிர் தோழன்… பாராட்டப்பட்ட மறைந்த நடிகர் பாபுவின் நடிப்பு..!!

ஒரு முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி நடித்திருந்தார். மேலும் அன்றைய தினத்தில் மிகவும் பிசியாக இருந்த இசையமைப்பாளர் ஹாரி ஜெயராஜ் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற எட்டு பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி வெளியானது.

படம் மக்களுக்கு புரிந்து இருந்தால் மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக இருந்திருக்கும். புளித்துப்போன கதைகளை பார்த்து சலித்து போன தமிழ் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான படமாக இருந்தது என்றும் ஊடகங்கள் விமர்சனம் எழுதின. ஆனால் பெரும்பாலான ரசிகர்களுக்கு இந்த படம் புரியாததால் சுமாராகவே இந்த படம் ஓடியது. அதே நேரத்தில் தயாரிப்பாளருக்கு நஷ்டம் இல்லாத படம்.

ரஜினி, கமல் பீல்டில் இருந்த போது அவுட்டாகாத நடிகர் சிவகுமார்… அப்புறம் பீல்டு அவுட்…. என்ன காரணம்னு தெரியுமா?

இந்த படத்தின் திரைக்கதை சிக்கலானது என்பதால் திரைக்கதை எழுதிய பின்னர் பாக்யராஜிடம் இயக்குனரா ஜீவா ஆலோசனை கேட்டதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்திற்கு சுஜாதா வசனம் எழுதியிருந்தார். மொத்தத்தில் இன்றும் பார்த்தால் கூட ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு 12B திரைக்கதை அமைந்திருக்கும். இந்த படத்தின் திரைக்கதையை புரிந்து கொண்ட ஒருசிலர் கொண்டாடினார்.