சினிமாக் கலையை ஊக்குவிக்கவும், நிதிகள் திரட்டவும் அவ்வப்போது நட்சத்திரக் கலைவிழாக்கள் நடத்துவது வழக்கம். அதேபோல் பிரபல இசையமைப்பாளர்களும், பாடகர்களும் அவ்வப்போது Live Concertகளை நடத்தி தங்களது ரசிகர்களை மகிழ்விக்கின்றனர்.
சினிமா நட்சத்திரங்கள், இசையமைப்பாளர்கள் மட்டும்தான் இது போன்று நிகழ்ச்சிகளை நடத்துவார்களா நாங்களும் சளைத்தவர் இல்லை என்று நடனக் கலைஞர்கள் கலை விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக டிசம்பர் 30ல் நடைபெற உள்ளது.
பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான ஸ்ரீதர் மாஸ்டர் இவ்விழாவினை ஒருங்கிணைக்கிறார். விழாவின் ஹைலைட் என்னவென்றால் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலம்தொட்டு இன்று வரை டான்ஸ் மாஸ்டர்களாக இருக்கும் கலைஞர்களை கௌரவப்படுத்துவதும், பழைய கலைஞர்களை தற்போது உள்ள சினிமா டிரெண்டுக்கு அறிமுகப்படுத்துவதும்தான்.
இன்னும் ஒரு மாசத்துக்கு வெறித்தனம் பண்ணப் போறோம் : அப்படி என்ன விஷேசம் ரோபோ சங்கர்?
அந்த வகையில் ஸ்ரீதர் மாஸ்டர் பழைய நடனக் கலைஞர்களையும், மாஸ்டர்களாக பணியாற்றியவர்களையும் சந்தித்து விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறார். மேலும் அவர்களைச் சந்திக்கும் போது எந்தப் பாடல் மூலமாக நடனத்தில் புகழ் பெற்றார்கள் என்பதையும் குறித்து வீடியோ வெளியிட்டு பின் அவர்களைச் சந்திக்கிறார்.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது Dance Don நிகழ்ச்சி குறித்த அப்டேட்களை வெளியிட்டு வரும் ஸ்ரீதர் மாஸ்டர் தற்போது பழைய டான்ஸ் மாஸ்டர்களான வசந்த், ஆண்டனி, ஜான்பாபு உள்ளிட்ட பிரபலங்களைச் சந்தித்து கலை நிகழ்ச்சி தொடர்பான அழைப்பிதழை அளித்து வருகிறார்.
சென்னை காமராஜர் அரங்கில் வருகிற டிசம்பர் 30, மாலை 4மணியளவில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் இந்தியாவின் முன்னணி நடன இயக்குநர்களும், நடனக்கலைஞர்களும் பங்கேற்றுச் சிறப்பிக்க உள்ளனர். மேலும் கோலிவுட் பெஸ்ட் டான்ஸ் விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
இதுவரை பிரபுதேவா போன்ற ஒரு சில மாஸ்டர்களின் நடனத்தையே திரையில் ரசித்து வந்த நாம் இந்நிகழ்ச்சி மூலமாக ஹீரோக்களை ஆட வைக்கும் ரியல் டான்ஸ் மாஸ்டர்களின் திறமைகளை இதன் மூலமாக அறியலாம். தற்போது இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்து வருகிறார் ஸ்ரீதர் மாஸ்டர்.
திரைப்படங்களில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் ஸ்ரீதர் மாஸ்டர் டான்ஸ் அகாடமி ஒன்றையும் நடத்திவருவது குறிப்பிடத்தக்கது.