இன்னும் ஒரு மாசத்துக்கு வெறித்தனம் பண்ணப் போறோம் : அப்படி என்ன விஷேசம் ரோபோ சங்கர்?

நவ. 7 இன்று உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள். இந்திய திரையுலகமே அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வரும்வேளையில் ரசிகர்களுக்கு விருந்தாக இந்தியன் 2, Thug Life, Project K, KH233 என அடுத்தடுத்து உலகநாயகனின் அப்டேட்கள் அவரது ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

உலக நாயகனைப் பார்த்து சினிமாவிற்கு வந்த திரைப் பிரபலங்கள் ஏராளம். அவரது டச் இல்லாத கதாநாயகர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அவரின் தீவிர ரசிகராக இருந்து சினிமாவில் அடியெடுத்து வைத்து இன்று சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும்  கோலோச்சி  வருபவர்தான் ரோபோ சங்கர். பல மேடைகளில் என்னுடைய திரையுலக ஆசான், குருநாதர் கமல்ஹாசன் தான் என்று வாயாரப் புகழ்ந்திருக்கிறார்.

இன்று அவரது பிறந்தநாளையொட்டி ரோபோ சங்கருக்கு கிடைத்த ஒரு சூப்பர் சான்ஸ் தான் இது. விருமாண்டி படத்தினை ரீ-ரிலிசை வெளியிடும் வாய்ப்பு கிட்டியிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் தற்போது மீண்டும் விருமாண்டி படம்  திரையிடப்பட்டுள்ளது.

Thuglife

இதனையொட்டி அவர் அளித்த பேட்டியில், ’‘நான் நடிகனே கிடையாது கமல்சார் பக்தன் எனவும், தற்போது அவரது பிறந்தநாளையொட்டி விருமாண்டி படத்தை கேட்டு வாங்கி ரீ-ரிலீஸ் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் தொடர்ந்து 4 நாட்களுக்கு காட்சிகள் ஹவுஸ்புல் ஆனதையும் சுட்டிக்காட்டிய ரோபோசங்கர் இந்த நவம்பர் மாதம் முழுவதும் அவருடைய பிறந்தநாளைக் வெறித்தனமாகக் கொண்டாடத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

விருமாண்டி வரிசையில் நாயகன், அன்பே சிவம் போன்ற படங்களையும் ரீ-ரிலீஸ் செய்ய கேட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆண்டவரை ஒவ்வொரு ஷாட்டிலும் அமர்க்களமாகக் காண்பிக்க தொழில்நுட்பங்களில் சில புதுமைகள் புகுத்தியுள்ளதாகவும் அதனால் தியேட்டரே திருவிழாக் கோலமாக இருக்கும்” எனவும் ரோபோ சங்கர் தெரிவித்தார்.

முறைப்படி உலகநாயகனிடம் அனைத்து அனுமதிகளையும் பெற்றுத்தான் இந்த நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாகவும் ரோபோ சங்கர் அந்தப் பேட்டியில் கூறியுள்ளார்.

தற்போது Thug Life படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி உலகநாயகன் ரசிகர்கள் மட்டுமல்லாது இந்திய திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் நிலையில் அவருடைய திரைப்படக் காட்சிகளை சோஷியல் மீடியாக்களில் ஷேர் செய்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.