டிஎன்பிஎஸ்சியில் 18 ஆயிரம் காலி பணியிடங்கள்.. மொத்தம் 77 ஆயிரம் பேருக்கு அரசு வேலை உறுதி

Published:

சென்னை: அடுத்த 17 மாதங்களில், 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகளை டிஎன்பிஎஸ்சி தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. டிஎன்பிஎஸ்சி தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இனி அந்த துறையில் பணிகள் வேகமெடுக்கும் என தெரிகிறது

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 3 ஆண்டுகளில் 65 ஆயிரத்து 483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ள நிலையில், ம் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் 77 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளாக அறிவிக்கப்பட்டள்ளது. இதில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மட்டும் 17 ஆயிரத்து 595 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த துறையில் பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளது. டிஎன்பிஎஸ்சி வரும் 2026-ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு 18 ஆயிரம் அரசு பணியிடங்களை நிரப்ப போகிறது. இந்த எண்ணிக்கை காலி பணியிடங்களின் எண்ணிக்கைகு ஏற்ப அதிகமாகவும் வாய்ப்பு உள்ளது. இதற்காக பல்வேறு அரசு துறைகளில் காலி பணியிடங்கள் குறித்த தகவல்களை சேகரிக்கும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது, துறை வாரியான பட்டியல் தயாரிக்கப்பட்டு, அந்த அடிப்படையில் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.

முன்னதாக டிஎன்பிஎஸ்சி கடந்த காலங்களில் தேர்வு முடிவுகளை தாமதமாகவே வெளியிட்டு வந்தது. இந்நிலையில் கடந்த காலங்களில் போல் அல்லாமல் மிக விரைவாக வெளியிடவும் டிஎன்பிஎஸ்சி தலைவராகி உள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி எஸ்.கே.பிரபாகர் முடிவு செய்துள்ளார்.

யுபிஎஸ்சி உள்ள பல்வேறு தேர்வுகள் தொடர்பாக எப்படி அட்டவணை வருகிறதோ, அதுபோல் அட்டவணையும் அதன்படி தேர்வுகளும், தேர்வு முடிவுகளும் சரியாக வரும் எனகிறார்கள் டிஎன்பிஎஸ்சி வட்டாரத்தில்.

டிஎன்பிஎஸ்சி சார்பில் அடுத்த மாதம் 14-ந் தேதி 2,327 பணியிடங்களுக்கான குரூப்-2 முதல்நிலை தேர்வு, அக்டோபர் மாதம் 14-ந் தேதி 654 பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வு, நவம்பர் மாதம் 9-ந் தேதி 861 பணியிடங்களுக்கு ஐ.டி.ஐ., டிப்ளமோ படித்தவர்களுக்கு தொழில்நுட்ப துறை பணியிட தேர்வுகள், அதே மாதம் 18-ந் தேதி ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை பணியிடங்கள் தேர்வு, டிசம்பர் மாதம் 14-ந் தேதி குற்றவழக்கு தொடர்பு துறை பணியிடங்கள், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 4-ந் தேதி குரூப்-5ஏ தேர்வு நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு தேர்வும் நடத்துவதற்கான அட்டவணை வெளியிடப்படும் என தெரிகிறது.

 

மேலும் உங்களுக்காக...