கூந்தல் எக்ஸ்டென்ஷன் பாதுகாப்பானதா? உங்கள் கூந்தலை எக்ஸ்டெண்ட் செய்யும் முன்பு இதையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள்…!

By Sowmiya

Published:

பெண்களுக்கு கூந்தலை பராமரிப்பது என்பது பிடித்தமான ஒன்று. அழகான அடர்த்தியான கூந்தலை பெறுவதற்கு பலரும் விரும்புவார்கள். ஆனால் பலருக்கு அப்படி அடர்த்தியான கூந்தல் இருப்பதில்லை. இயற்கையான முறையில் அடர்த்தியையும் பளபளப்பையும் பெற முடியும் என்றாலும் அதற்கு போதிய நேரம் அனைவருக்கும் கிடைப்பதில்லை.

வாவ்! கூந்தல் மிருதுவான பளபளப்பான தோற்றம் பெற வீட்டிலேயே செய்ய கூடிய 5 எளிய வழிமுறைகள்…

இதன் காரணமாக பலரும் நாடுவது கூந்தல் எக்ஸ்டென்ஷன் அதாவது தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ செயற்கை முறையில் கூந்தலை வைத்துக் கொள்வது.  பல ஆண்டுகளாக நடைமுறையில் இருக்கும் சவுரி முடி தானே என்றால் இது அதுபோன்று இல்லை. இதில் தற்காலத்திற்கு ஏற்றார் படி பல மாற்றங்கள் செய்யப்பட்டு கூந்தல் எக்ஸ்டெண்ட் செய்ததே தெரியாத அளவிற்கு செய்து விடுகிறார்கள். இதனை தினமும் நீக்கி மாட்ட வேண்டிய அவசியம் இல்லை.

hair extension 2 1

இந்த கூந்தல் எக்ஸ்டெண்டுகளுக்கு என பிரத்தியேகமாக பல பார்லர்கள் மற்றும் சலோன்கள் உள்ளன இவை ஒன்பதாயிரம் வரை இந்த கூந்தல் எக்ஸ்டெண்டுகளுக்கு வசூலிக்கின்றன. இந்த கூந்தல் எக்ஸ்டென்ஷனில் பல வகைகள் உண்டு.

கூந்தல் எக்ஸ்டெண்ட் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு பலவிதமான சந்தேகங்களும் குழப்பங்களும் ஏற்படலாம் அவற்றைப் பற்றி ஒரு பார்வை.

hair extension 3

கூந்தல் எக்ஸ்பென்ஷனில் இருக்கும் பொதுவான சந்தேகங்கள்:

1. கூந்தல் உதிர்வு அதிகம் ஏற்படும்:

கூந்தல் எக்ஸ்டென்ஷன் செய்தாலே ஏற்கனவே உள்ள இயற்கையான முடி பலவீனம் அடைந்து விடும் என்று சிலர் கருதுகிறார்கள் இது முழுவதும் உண்மை இல்லை. ஆனால் சில கூந்தல் எக்ஸ்டென்கள் ஏற்கனவே உள்ள முடிகள் வேர்ப்பகுதியோடு இணைக்கப்படுவதால் அவற்றை இழுக்கும் பொழுது இயற்கையான கூந்தல் உதிர்வதற்கு வாய்ப்பு உண்டு.

2. தலைவலியை உண்டாக்கும்:

ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்தால் தலைவலி ஏற்படும் என்பது உண்மை அல்ல. ஆனால் அதிகப்படியான எடை உடைய கூந்தல் எக்ஸ்டென்ஷன் செய்யும் பொழுது வலி ஏற்படலாம். தலையில் வேறு ஏதேனும் அழுத்தம் கொடுக்கும் பொழுதும் வலி ஏற்படலாம். குறைந்த எடையிலான முடிகளை கொண்டு எக்ஸ்டென்ஷன் செய்தால் வலி ஏற்படாது. எக்ஸ்டென்ஷன் செய்ய தேர்ந்தெடுக்கும் இடமும் முக்கிய பங்கு வகிக்கிறது.

hair extension 5

3. கூந்தல் சிக்கு ஏற்படும்:

இயற்கையான கூந்தலே சரியாக பராமரிக்காமல் இருக்கும் பொழுது சிக்கு ஏற்படுவது உண்டு. அதுபோல தான் கூந்தலில் எக்ஸ்டென்ஷன் செய்யும் பொழுதும் சரியாக முறையாக பராமரிக்காவிட்டால் சிக்கு அடையும். எனவே அதனை முறையாக பராமரித்தல் அவசியம்.

4. போலியான முடி என்பது நன்கு தெரியும்:

இது உண்மை அல்ல. இயற்கையான முடி போன்றே தோற்றம் உடைய கூந்தல் தான் எக்ஸ்டென்ஷனில் பயன்படுத்தப்படுகிறது. அதனால் இது செயற்கை தோற்றத்தை தராமல் உண்மையான கூந்தல் போன்ற தோற்றத்தையே தரக்கூடிய அளவுக்கு செய்ய முடியும்.

hair extension 4

கூந்தல் எக்ஸ்டென்ஷன் செய்யும் முன்பு கவனத்தில் கொள்ள வேண்டியவை:
  • ஏற்கனவே சேதம் அடைந்த கூந்தலாக இருந்தால் அதனை முறையான நிபுணரிடம் சிகிச்சை பெற்று சரி செய்த பின் எக்ஸ்டென்ஷன் மேற்கொள்ளலாம்.
  • சரியான மற்றும் திறமை வாய்ந்த நிபுணரிடம் ஹேர் எக்ஸ்டென்ஷன் செய்து கொள்ள வேண்டும்.
  • கூந்தல் எக்ஸ்டென்ஷன் செய்த பிறகு அதனை பராமரிப்பதில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும் இல்லையேல் அது இயற்கை முறையில் பாதிக்கும் எனவே உங்களால் அதை செய்ய முடியுமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
hair
 

கூந்தல் தோற்றத்தின் ஒரு முக்கிய அடையாளமாக உள்ளது. பலர் முடி இழப்பு ஏற்பட்ட பின் தன்னம்பிக்கை அற்று காணப்படுவார்கள். அவர்களுக்கு உடனடி நிவாரணம் தர இந்த கூந்தல் எக்ஸ்டென்ஷன் நல்ல தீர்வாக அமைகிறது. இருப்பினும் ஒரு சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்கிறது. நல்ல தரமான நிலையத்தை தேர்வு செய்து முறையாக பராமரித்தால் நல்லது.

மேலும் உங்களுக்காக...