ஹேர்கலரிங்க் செய்ய 500 முதல் ஆயிரம் வரை குறைந்தபட்சம் செலவு ஆகும், ஆனால் இப்போது நாம் செலவே இல்லாமல் வீட்டிலேயே ஹேர் கலரிங் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.
தேவையானவை:
பீட்ரூட்- 1
தயிர்- கால் கப்
மருதாணி இலை- கைப்பிடியளவு
செய்முறை:
- மருதாணி இலைகளை வெயிலில் 4 மணி நேரம் காயவைத்து மென்மையாக பொடித்துக் கொள்ளவும்.
- அடுத்து பீட்ரூட்டினை தோல்நீக்கி மிக்சியில் போட்டு தயிர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- இந்தக் கலவையுடன் மருதாணியைக் கலந்து முடியில் பயன்படுத்தவும்.
இந்தக் கலவையினை தலைமுடியில் அப்ளை செய்து 30 நிமிடங்கள் ஊறவிட்டுக் கழுவினால் தலைமுடி சூப்பராக கலர் மாறி இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள்.